பதான்கோட்டில் பாகிஸ்தான் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்!
Pakistan: லாகூரில் குண்டுவெடிப்பு சத்தம்; மீண்டும் தாக்குதலா... என்ன நடந்தது?
கிழக்கு பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் வியாழக்கிழமை (மே 8) காலையில் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் இந்தியா பாகிஸ்தானில் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் குண்டு வெடிப்பு சத்தத்தால் மக்கள் பீதியடைந்து, தங்கள் வீடுகளுக்குள் ஓடி ஒளிந்துகொண்டுள்ளனர்.
மூன்றுமுறை குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், இதுவரையில் குண்டுவெடிப்பு சத்தத்துக்கான சரியான காரணம் தெரியவரவில்லை.
Three explosions were heard at Lahore Walton airport in the city of Lahore, Pakistan as air raid sirens sound. pic.twitter.com/M11TGJdvBX
— AMK Mapping (@AMK_Mapping_) May 8, 2025
பஹல்காமில் 26 அப்பாவி இந்தியர்கள் படுகொலையில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள இந்தியா, அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை நடத்தி முடித்திருக்கிறது.
இந்த நடவடிக்கையின்போது 31 அப்பாவி பாகிஸ்தான் மக்கள் கொல்லப்பட்டதாகவும், இந்தியாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம், இந்தியாவின் விமானங்கள் சுடப்பட்டதாக கூறுவது தவறான தகவல் எனக் கூறியுள்ளது.
பாகிஸ்தான் காஷ்மீரில் உள்ள பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் மரணமடைந்துள்ளதாகவும் 43 பேர் காயமடைந்ததாகவும் இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Pakistan நிலை என்ன?
இந்தியாவின் தாக்குதலுக்குப் பிறகு இன்று (மே 8) காலையில் பெரும்பாலான பாகிஸ்தானிய நகரங்கள் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளன. குழந்தைகள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
எல்லையை ஒட்டிய பஞ்சாப் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவமனைகள் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அரசு இந்தியாவின் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி தரப்படும் எனக் உறுதியேற்றுள்ளது எனப் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் பத்திரிகை பேட்டியில் கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தும்பட்சத்தில் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தான் லாகூரில் குண்டுவெடிப்பு சத்தம் பேச்சுபொருளாகியிருக்கிறது.
இதற்கிடையில் உலக நாடுகள், இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியை நிலைநாட்ட முன்வரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.