பாஜக: "எங்கள் கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து வருவார்கள்" - வானதி சீனிவாசன்...
Parking: "உரையாடலா அல்லது யூனிவர்சிட்டி பாடமா?" - கமல் ஹாசன் சந்திப்பு குறித்து ஹரிஷ் கல்யாண்!
71வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ள பார்கிங் திரைப்படக் குழுவினரைச் சந்தித்து வாழ்த்தியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
சிறந்த படம் மட்டுமல்லாமல் சிறந்த திரைக்கதை விருதையும் அந்தப் படம் வென்றது. அதில் நடித்திருந்த எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார்.
முன்னதாக சமூக ஊடகங்கள் வழியாக தேசிய விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த கமல் ஹாசன், இயக்குநர் ராம்குமார், ஹரிஷ் கல்யாண், இசையமைப்பாளர் சாம் சி.எஸ் உள்ளிட்டவர்களைச் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.
கமல் ஹாசனைச் சந்திப்புக் குறித்து பார்கிங் பட கதாநாயகன் ஹரிஷ் கல்யாண், "விருதே வாழ்த்திய தருணம். ஒரு நண்பன் போலப் பேசினீர்கள். உரையாடலா அல்லது யூனிவர்சிட்டி பாடமா? கற்றது பல.. கற்க வேண்டும் உங்களிடம் இருந்து பற்பல. மிகச்சிறந்த புத்தகத்தைப் படித்த ஒரு கர்வம் அங்கிருந்து விடை பெற்றபொழுது.
எங்களை அழைத்து வாழ்த்தியதற்கு நன்றி கமல்ஹாசன் சார். லவ் யூ சார்!" என ட்விட்டரில் எழுதியுள்ளார்.

இயக்குநர் ராம்குமார், "லெஜண்டரி கமல் ஹாசன் சார் பாராட்டையும் மதிப்புமிக்க கருத்துக்களையும் பெற்றதில் உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.
எங்கள் பார்க்கிங் குழுவிற்கு அவர் அளித்த அன்பான வார்த்தைகள் எங்களுக்கு மிகுந்த மன உறுதியை அளிக்கின்றன.
இது ஒரு மறக்க முடியாத தருணம்" எனப் பதிவிட்டுள்ளார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...