செய்திகள் :

Provident Fund: ஆன்லைனிலேயே ஈசியாக PF eKYC செய்யலாம்! - வழிமுறைகள் என்ன? | How to

post image

பி.எஃப் பணம் உடனடியாக, எளிதாக சிக்கலின்றி கிடைக்க வேண்டுமா? அதற்கு KYC அப்டேட் அவசியம். இதற்காக இ.பி.எஃப்.ஓ அலுவலகத்திற்கு நடையாக நடக்க வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம்.

அந்த e-KYC-ஐ ஆன்லைனிலேயே செய்வதற்கான வழிமுறைகள் இதோ!

1. முதலில், EPFO வலைதளத்திற்குள் செல்லவும்.

2. அடுத்ததாக, உங்களது யுனிவர்சல் கணக்கு எண் (UAN), பாஸ்வோர்டு, கேப்ட்சா ஆகியவற்றை சரியாக உள்ளிடவும்.

3. இப்போது ஹோம் பேஜில் 'Manage > KYC' கிளிக் செய்யவும்.

பி.எஃப்
பி.எஃப்

4. இப்போது திறந்திருக்கும் பக்கத்தில் பான், ஆதார், வங்கி தகவல்கள், பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் போன்ற பல ஆப்ஷன்கள் காட்டும். இவற்றின் ஸ்கேன் செய்த ஆவணங்களை அப்லோட் செய்வதோடு, அங்கே கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை சரியாக பதிந்துவிடவும்.

குறிப்பு: இங்கே பதியப்படும் தகவல்கள் நீங்கள் அப்லோட் செய்யும் ஆவணங்களுடன் பொருந்திப் போகிறதா என்பதை ஒருமுறைக்கு, இருமுறை சரிபார்த்து கொள்ளுங்கள்.

5. நீங்கள் பதிந்திருக்கும் தகவல்களை 'Save' செய்யுங்கள். இப்போது உங்களது கணக்கு 'Pending for Approval' என்ற நிலைக்கு செல்லும்.

6. இனி நீங்கள் உள்ளீடு செய்துள்ள தகவல்களை உங்களது நிறுவனம் சரிபார்த்து ஒப்புதல் கொடுக்க வேண்டும். இது நடந்தப் பின், 'Approved by Employer' என்ற நிலைக்கு சென்றுவிடும்.

e-KYC அப்டேட்டைத் தொடங்குவதற்கு முன், செய்ய வேண்டியது என்ன?

  • உங்களது பான் எண்ணோடு ஆதார் இணைந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

  • பான், ஆதார், வங்கி தகவல்கள், பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றின் ஸ்கேன் செய்த ஆவணங்களை குறிப்பிட்ட MBகளுக்குள் சரியாக வைத்துக்கொள்ளுங்கள்.

  • e-KYC அப்டேட்டிற்கு எந்தக் கட்டணமும் இல்லை. இதை நியாபகம் வைத்துகொள்ளுங்கள்.

  • நீங்கள் பதிவிட்டிருக்கும் தகவல்களுக்கும், ஆவணத்தில் உள்ள தகவல்களும் மாறுபட்டிருந்தால் உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அதனால், பதிவிடும்போது கவனமாக இருக்க வேண்டும்.

அரசுப் பணியாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடு - விகடன் 'லாபம்' வழங்கும் சிறப்பு வெபினார்

ஹாய்! எப்படி இருக்கீங்க?நீங்க மாநில/மத்திய அரசுப்பணியில் இருக்கீங்களா? இல்ல அரசு வேலைக்காக முயற்சி செய்து வர்றீங்களா? அரசுப் பணியாளர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா? முதலீடு செஞ்சாலும் எது ... மேலும் பார்க்க

வெள்ளிதான் அடுத்த தங்கமா? 2025-ல் முதலீடு செய்வது எப்படி? - விகடன் லாபம் நடத்தும் இலவச வெபினார்

வெள்ளிதான் அடுத்த தங்கமா? 2025-ல் முதலீடு செய்வது எப்படி?கடந்த ஓராண்டாக தங்கத்தில் முதலீடுசெய்தவர்களுக்கு படு லாபம். ஆனால் இந்தக் கட்டுரை தங்கம் பற்றியதல்ல. வெள்ளை உலோகமான வெள்ளி பற்றியது. கடந்த சில வ... மேலும் பார்க்க

Share Market: 'பரபர பங்குச் சந்தையில் அமைதியான முதலீட்டு யுக்தி' - நாணய விகடனின் ஆன்லைன் வகுப்பு

பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளான நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் எப்போது வேண்டுமானாலும்ஏற்ற இறக்கம் இருக்கலாம்.மேலும் ஒரு பங்கை ஒரு அனலிஸ்ட் வாங்கச் சொல்வார... மேலும் பார்க்க

Investing: '25 ஆண்டுகளில், 5 கோடி ரூபாய் சேர்ப்பது எப்படி?' - கொங்கு பகுதியினருக்கான வழிகாட்டல்!

ஹாய்! எப்படி இருக்கீங்க?வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க பணம் தேவையில்லைன்னுநிறைய பேர் சொல்லுவாங்க. அவங்ககிட்ட ஒரு பணக்கட்டை நீட்டுங்க, கண்டிப்பா யாரும் வேணாம்னு சொல்லவேமாட்டாங்க. காரணம், சமூகத்தில் வாழ ... மேலும் பார்க்க

LIC: ISO 22301:2019 வணிக தொடர்ச்சி மேலாண்மை அமைப்பு சான்றிதழைப் பெற்ற எல்ஐசி நிறுவனம்

எல்ஐசி நிறுவனம், பிரிட்டிஷ் தரநிலை நிறுவனத்திடமிருந்து ISO 22301:2019 வணிக தொடர்ச்சி மேலாண்மை அமைப்பு சான்றிதழைப் பெற்றுள்ளது.முன்னணி பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் செயல்பாட்டு மீள்தன்மை, வணிக தொடர்ச... மேலும் பார்க்க

உங்ககிட்ட 10,000 ரூபாய் இருக்கா? மால், ஐடி பார்க், ஹைவே எல்லாத்தையும் வாங்க முடியும் #Labham_Webinar

ரியல் எஸ்டேட் முதலீடுங்குறதுசாமானியஇந்தியர்களுக்கெல்லாம் ஒரு பெருங்கனவு! வீடு அல்லது ஒரு கடையைக் கட்டி வாடகை விடும்போது, அதன் மதிப்பு ஒரு பக்கம் உயர்ந்துட்டே இருக்கும், அதேபோலமறுபக்கம் மாதாமாதம் வாடகை... மேலும் பார்க்க