செய்திகள் :

உங்ககிட்ட 10,000 ரூபாய் இருக்கா? மால், ஐடி பார்க், ஹைவே எல்லாத்தையும் வாங்க முடியும் #Labham_Webinar

post image

 ரியல் எஸ்டேட் முதலீடுங்குறது சாமானிய இந்தியர்களுக்கெல்லாம் ஒரு பெருங்கனவு! வீடு அல்லது ஒரு கடையைக் கட்டி வாடகை விடும்போது, அதன் மதிப்பு ஒரு பக்கம் உயர்ந்துட்டே இருக்கும், அதேபோல மறுபக்கம் மாதாமாதம் வாடகையும் கிடைச்சிட்டே இருக்கும்.

ஆனா, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதில் இரண்டு பெரும் சிக்கல் இருக்கு - ஒன்னு, உங்ககிட்ட கோடிக்கணக்குல, இல்லைனா பல லட்சங்கள் இருந்தா மட்டுமே முதலீட்டை ஆரம்பிக்க முடியும்! ரெண்டு - ரியல் எஸ்டேட் புராப்பர்ட்டியை வாங்குவதற்கான பத்திரப் பதிவு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள், வில்லங்கங்கள் இல்லாத இடத்தைப் பார்ப்பது மற்றும் சொத்தைப் பராமரிப்பது எல்லாம் மிகப்பெரிய பொறுப்பாகும்.

Real Estate
Real Estate

இந்த இரண்டு சிக்கல்களும் இல்லாம ரியல் எஸ்டேட்டில் முதலீடு பண்ண முடியாதா? பதில் - முடியும்!
REITs & InVITs மூலம் நிலம்/வீடு/கமர்ஷியல் புராப்பர்ட்டி வாங்காமலே அதில் முதலீடு பண்ண முடியும்! REITs - Real Estate Investment Trusts & InVIT - Infrastructure Investment Trusts மூலம், வெறும் 10000 ரூபாய் இருந்தாலே நீங்க கமர்ஷியல் பில்டிங்ஸ், மால்ஸ், ஷாப்பிங் காம்பிளெக்ஸ், ஹைவே, மின் கட்டமைப்புகள் எல்லாத்துலயும் முதலீடு பண்ண முடியும்!

முதலீடு செய்றது மட்டுமில்லாம டிவிடெண்ட்ஸ் மூலம் நீங்க தொடர்ந்து வருவாய் ஈட்டவும் முடியும்! பேப்பர்வர்க், பராமரிப்பு போன்ற தொல்லை கிடையவே கிடையாது!

நீங்க என் REITs & InvITs-ல முதலீடு பண்ணணும்?
* தொடர் வருமானம் ஈட்டும் வாய்ப்பு

* நிபுணர்கள் உங்க முதலீட்டைப் பாத்துப்பாங்க

* ஸ்டாக்ஸ் போல ஈஸியா வாங்கலாம்

* பங்குகள் & மியூச்சுவல் ஃபண்ட்ஸ் தாண்டிய முதலீடு

* SEBI-யால் முறைப்படுப்பட்ட முதலீடு

நீங்க REITs & InvITs-ல பற்றி மேலும் தெரிஞ்சுக்கணுமா?
நீங்க உங்க பணத்தை வெவ்வேறு வழிகள்ல முதலீடு செய்யணும்னு நினைப்பவரா? ஸ்டாக்ஸ், மியூச்சுவல் ஃபண்ட்ஸ், பாண்ட்ஸ், தங்கம் போல பிற முதலீடுகள் குறித்தும் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறீங்களா? ரியல் எஸ்டேட் மற்றும் கட்டமைப்பு துறைகளில் முதலீடு செய்யும் உத்திகளான REITs & InVITs-ஐ நிர்வகிப்பது யார்? அதில் எங்கே, எவ்ளோ, எப்படி முதலீடு பண்ணணும்? எவ்ளோ ரிட்டன்ஸ் கிடைக்கும்? எலலத்தையும் தெரிஞ்சுக்க மறக்காம விகடன் 'லாபம்' நடத்தும் சண்டே வெபினாரில் கலந்துக்கோங்க.

REITs & InvITs
REITs & InvITs

தலைப்பு: REITs மற்றும் InVITs-ல் முதலீடு செய்வது எப்படி?
நாள்: ஜூன் 1, 2025, ஞாயிறு
நேரம்: காலை 11.00 - 12.30 மணி
பேச்சாளர்: V. மாதவன், தகவல் தொடர்பு நிபுணர் & REITs மற்றும் InVITs நிபுணர்

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. 150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம்.

முன்பதிவு செய்ய: https://forms.gle/7Z1JjuTwcChm2tXi8

விகடன் லாபம் பற்றி
இதுவரை மியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றி நிறைய எழுதியும், பல்வேறு முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியும் வந்த விகடன் மூலம் இனி நீங்க மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீட்டை செய்ய முடியும்! விகடன் 'லாபம்' நிறுவனம் மூலம் ஒரு அக்கவுண்ட் துவங்கி இன்னைக்கே, சிம்பிளா நீங்க மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீட்டை ஆரம்பிக்கலாம்! லாபம் மூலம் எங்க, எப்படி, எவ்ளோ முதலீடு செய்யணும்னு தெரிஞ்சுக்கணுமா? உங்க நிதி இலக்குகள் பற்றி பேசணுமா? 96002 96001 என்ற நம்பருக்கு கால் பண்ணுங்க, எங்க நிபுணர்கள் 24-48 மணி நேரத்தில் உங்களை அழைப்பாங்க.

விகடன் லாபம்
விகடன் லாபம்

வெப்சைட்: https://labham.money/

பொறுப்புத் துறப்பு: விகடன் வெல்த் பிரைவெட் லிமிடெட்/லாபம், AMFI அமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமாகும் - ARN-310095. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Share Market: 'பரபர பங்குச் சந்தையில் அமைதியான முதலீட்டு யுக்தி' - நாணயம் விகடனின் ஆன்லைன் பயிற்சி

பங்குச் சந்தையில் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம். மேலும் ஒரு பங்கை ஒரு அனலிஸ்ட் வாங்கச் சொல்வார். அதே பங்கை இன்னொரு அனலிஸ்ட் விற்கச் சொல்வார்.நியாயமான லாபம் இழப்பு..!ஒட்டு மொத்த பங்குச் சந்த... மேலும் பார்க்க

மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை ரிவ்யூ செய்வது எப்படி? #Labham_Webinar

ஹாய்! எப்படி இருக்கீங்க?நீங்க மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செஞ்சுட்டு இருக்கீங்களா? இந்தப் பதிவு உங்களுக்காகத்தான்.மியூச்சுவல் ஃபண்ட்ஸ் - விலைவாசி உயர்வைத்தாண்டி வளரும், மிகப்பெரிய ரிஸ்க் இல்லாத முதலீ... மேலும் பார்க்க

பண(னி)ப்போர்! - எது சரி? எது தவறு? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

LIC: `இனி வாட்ஸ்அப் பாட் மூலம் பிரீமியம் செலுத்தலாம்' - புது வசதியை அறிமுகப்படுத்திய எல்ஐசி

'டிஜிட்டல் மாற்றம்' மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய டிஜிட்டல் முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) இன்று 'வாட்ஸ்அப் பாட் மூலம் பிரீமியம் செலுத்... மேலும் பார்க்க

கணவன் - மனைவி ரெண்டு பேருமே சம்பாதிக்கிறீங்க... ஆனாலும் பணம் பத்தி கவலையா? #LabhamWebinar

நீங்க சம்பாதிக்கிறீங்க. உங்க கணவன்/மனைவியும் சம்பாதிக்கிறாங்க. யோசிச்சு பார்த்தா, பொருளாதாரத்தை பொறுத்தவரை உங்க வாழ்க்கை ரொம்ப ஈஸியா போகுது. ஆனா இந்த நிலை எப்போதுமே நீடிக்குமா?ஒருத்தர் பண நிர்வாகம் பற... மேலும் பார்க்க

Labham: சிங்கப்பூர் & மலேசியாவில் வசிக்கிறீங்களா? உங்க வருங்காலம் பணக் கஷ்டம் இல்லாம இருக்கணுமா?

நீங்க இந்தியாவை விட்டுக் கிளம்பும்போது பெருங்கனவுகளோட அந்த ஃபிளைட்டில் ஏறி இருப்பீங்க! இப்போ அந்தக் கனவு பலிக்கவும் ஆர்மபிச்சு இருக்கும். சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் வாழும் நீங்க இப்போ நிம்மதியா இ... மேலும் பார்க்க