பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!
Rohit: "அடுத்த இலக்கு இதுதான்" - டெஸ்ட் ஓய்வுக்குப் பின் எதிர்காலம் குறித்து என்ன சொல்கிறார் ரோஹித்?
இந்திய கிரிக்கெட் அணிக்கு 2022-ல் மூன்று ஃபார்மட் அணிக்கும் கேப்டனாகப் பொறுப்பேற்ற ரோஹித் சர்மா, 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.
அதன்பிறகு, டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு மட்டும் கேப்டனாகச் செயல்பட்டுவந்தார் ரோஹித்.
இதில், 2024 இறுதியில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததாலும், ஆஸ்திரேலியாவுக்கெதிராக பார்டர் கவாஸ்கர் தொடரை இழந்ததாலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் ஓய்வுபெற வேண்டும் எனப் பேச்சுக்கள் எழுந்தன.
இத்தகைய பேச்சுகளுக்கு மத்தியில், மார்ச்சில் இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்தார் ரோஹித்.
இருப்பினும், ஜூன் மாதம் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் கேப்டன்சியிலிருந்து ரோஹித் நீக்கப்படுவார் என்று நேற்று (மே 7) பேச்சுக்கள் அடிபட்ட அடுத்த சில மணிநேரங்களிலேயே, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக ரோஹித் அறிவித்தார்.
அதேசமயம், தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுவேன் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், தனது கிரிக்கெட் கரியரில் அடுத்த இலக்கு என்ன என்பதை ரோஹித் தெரிவித்திருக்கிறார்.
ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளர் விமல் குமாருடனான நேர்காணலில் ரோஹித், "2027 ஒருநாள் உலகக் கோப்பையில் கண்டிப்பாக விளையாட வேண்டும் என்பதே மனதில் இருக்கிறது.
கோப்பையை வெல்ல வேண்டும். அது நடந்தால் நன்றாக இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.

அதேபோல், ரோஹித்தின் சிறுவயது பயிற்சியாளர் சித்தேஷ் லாட், "2027 ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதுதான் ரோஹித்தின் இலக்கு. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பும் இலக்காக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறவில்லை.
இப்போது, 2027 உலகக் கோப்பையை வென்ற பின்னர் அவர் ஓய்வு பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." என்று ஊடகத்திடம் கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs