செய்திகள் :

Operation Sindhoor: 'ஒற்றுமையில் அச்சமற்றவர்கள்' - கிரிக்கெட் பிரபலங்களின் பதிவு

post image

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ‘ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியிருக்கிறது.

இந்த ஆபரேஷனில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள 9 தீவிரவாத இடங்களை இந்திய இராணுவம் குறி வைத்துத் தாக்கியிருக்கிறது.

ஆபரேஷன் சிந்தூர்
ஆபரேஷன் சிந்தூர்

இந்திய இராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை வரவேற்று அரசியல் தலைவர்கள் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் கிரிக்கெட் பிரபலங்களும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து பதிவிட்ட சச்சின் டெண்டுல்கர், “ஒற்றுமையில் அச்சமற்றவர்கள். வலிமையில் எல்லையற்றவர்கள். இந்தியாவின் கேடயம் அதன் மக்கள்தான். இந்த உலகத்தில் தீவிரவாதிகளுக்கு இடமில்லை. நாங்கள் எல்லோரும் ஒரே அணி” என்று பதிவிட்டிருக்கிறார். 

தொடர்ந்து ஹர்பஜன் சிங் வெளியிட்ட பதிவில், “ ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்பது பஹல்காமில் எங்கள் அப்பாவி மக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதற்கு இந்தியா  கொடுத்த பதிலடி” என்று பதிவிட்டிருக்கிறார்.

‘தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா தனது உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது’ தவான் பதிவிட்டிருக்கிறார். 

தவிர கம்பீர், சேவாக் உள்ளிட்ட சிலரும்  ‘ஆபரேஷன் சிந்தூருக்கு' ஆதரவாகப் பதிவிட்டிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

KKR vs CSK : 'ஒரு வழியா ஜெயிச்சிட்டோம் மாறா!' - எப்படி வென்றது சிஎஸ்கே?

'சென்னை வெற்றி!'சீசனின் க்ளைமாக்ஸில் ஒரு போட்டியை வென்றிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருந்த சென்னை அணி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் வகையில் கொல்க... மேலும் பார்க்க

Dhoni : 'கொல்கத்தாவும் என்னோட சொந்த ஊர்தான்!' - ஈடன் கார்டனில் நெகிழ்ந்த தோனி

'கொல்கத்தா vs சென்னை!'கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஈடன் கார்டனில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான டாஸை கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே வென்றார். மு... மேலும் பார்க்க

Gill : 'டெஸ்ட் மேட்ச் ஆடுற மாதிரி இருந்துச்சு; ஆனால்...' - திரில் வெற்றி குறித்து கில்

"குஜராத் வெற்றி!'மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி வான்கடேவில் நடந்து முடிந்திருக்கிறது. மழைக்கு நடுவே பல ட்விஸ்ட்களோடு நடந்து முடிந்த இந்தப் போட்டியை குஜராத் அணி DL... மேலும் பார்க்க

Hardik Pandya : 'நாங்கள் செய்திருப்பது ஒரு க்ரைம்!' - தோல்வி பற்றி ஹர்திக் பாண்ட்யா

'மும்பை தோல்வி!'மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி வான்கடேவில் நடந்து முடிந்திருக்கிறது. மழைக்கு நடுவே பல ட்விஸ்ட்களோடு நடந்து முடிந்த இந்தப் போட்டியை குஜராத் அணி DLS... மேலும் பார்க்க

MI vs GT : சஸ்பென்ஸ் கொடுத்த மழை; ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்; - மும்பையை எப்படி வீழ்த்தியது குஜராத்?

'மும்பை தோல்வி!'மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி வான்கடேவில் நடந்து முடிந்திருக்கிறது. இரண்டு அணிகளுமே மிகச்சிறப்பாக ஆடி வரும் என்பதால் இந்தப் போட்டி மீது பெருத்த எ... மேலும் பார்க்க

Virat Kohli: "நான் தனிமையாக உணருவதில்லை; காரணம்..." - பர்சனல் பகிர்ந்த விராட் கோலி

தொகுப்பாளர் மாயந்தி லாங்கர் உடன் RCB அணியின் பாட்காஸ்டில் கலந்துகொண்ட விராட் கோலி, தனது தனிப்பட்ட நேரம் மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றிப் பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்... மேலும் பார்க்க