2027-ஆம் ஆண்டிற்குள் யானைக்கால் நோய் இல்லாத இந்தியா: மத்திய அமைச்சா் நட்டா உறுதி
Sai Pallavi: `ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்?' -ரசிகரின் கேள்விக்கு சாய் பல்லவி ஜாலியான பதில்
நாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'லவ் ஸ்டோரி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' படத்தில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், சாய்பல்லவி தனியார் சேனலுக்கு அளித்திருக்கும் ஒரு பேட்டியில், ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். அதில், நடிப்பை தவிர வேறு எதில் ஆர்வம் அதிகம்? ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்? எனக் கேட்கப்பட்டது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/gsamrg4y/GjWzeDibwAA37a2.jpg)
அதற்கு பதிலளித்த சாய்பல்லவி, `` ஓய்வு நேரத்தில் எனக்குப் பிடித்த விஷயங்களை செய்வேன். சமீபத்தில், நான் தேனீ வளர்ப்பைத் தொடங்கியிருக்கிறேன். நான் இன்னும் அதில் அவ்வளவு திறமைசாலியாகவில்லை. ஓய்வு நேரங்களில் எனக்குத் தனிமை பிடிக்கும். தனியாக இருப்பது பிடிக்கும். அப்போது திரைப்படங்களைப் பார்ப்பேன். நடனமாடுவேன்... விரும்பினால் சமைப்பேன்... அப்படி முழுமையாக சொல்ல முடியாது.
பெரும்பாலும் பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவேன். என் தோட்டத்துக்குச் செல்வேன். இப்போது சில விவசாய வேலைகள் நடக்கின்றன. அவர்களுடன் சேர்ந்து கேரட், உருளைக்கிழங்கு போன்றவைகளை அறுவடை செய்வேன். இப்படித்தான் போகும் என் ஓய்வு நேரங்கள்" என்றார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/r4x6xn6k/GjQJMmPXQAAU2O1.jpg)
ஓய்வு நேரத்தில் நம்மை மகிழ்வுடன் வைத்திருக்கும் செயல்களில் ஈடுபடுவது மன அழுத்தத்தைக் குறைத்து, படைப்பாற்றலை அதிகரிக்கும். நம் மனநிலையை மேம்படுத்தி, மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்