செய்திகள் :

Samantha: அட்லீ இயக்கத்தில் மீண்டும் சமந்தா நடிக்கிறாரா ? - பதில் சொல்கிறார் சமந்தா

post image

நடிகை சமந்தா 'சுபம்' என்ற தெலுங்கு திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுக்கிறார் சமந்தா.

இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளுக்காக சுற்றி வருகிறார் சமந்தா.

Samantha
Samantha

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் திரைப்படத்தில் சமந்தாதான் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் கிசுகிசுக்கப்பட்டது.

அது தொடர்பாக இத்திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் சந்திப்பில் பேசியிருக்கிறார் சமந்தா.

அவர், "இயக்குநர் அட்லீயும் நானும் நல்ல நண்பர்கள். வருங்காலத்தில் நானும் அவரும் இணைந்து பணியாற்றுவோம். ஆனால், அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தில் நான் நடிக்கவில்லை." எனக் கூறி தகவல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

அட்லீ இயக்கத்தில் சமந்தா 'தெறி', 'மெர்சல்' ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படம் பிரமாண்டமான வகையில் உருவாகவிருக்கிறது. இப்படத்திற்கான முதற்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Samantha
Samantha

சமந்தா 'மா இன்டி பங்கரம்' என்ற தெலுங்கு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் கடந்த ஆண்டே வெளியாகியிருந்தது.

அது தொடர்பாக பேசிய சமந்தா, "அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடங்கவிருக்கிறது. படப்பிடிப்பு தொடங்கியதும் விரைவில் அதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும்.

ஒரு வகையிலான கதைகளில் மட்டுமே நான் நடிக்கவேண்டும் என எனது எல்லையை நானே சுருக்கிக் கொள்ள விரும்பவில்லை." எனக் கூறியிருக்கிறார்.

விழுப்புரம்: மேடையில் மயங்கி விழுந்த விஷால்; ``முழுமையான ஓய்வு தேவை'' - மருத்துவமனை சொல்வதென்ன?

நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், நடிகர் விஷால் மயங்கி விழுந்தது பேசுபொருளாகி உள்ளது.விழுப்புரத்தில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதில், நேற்று தென்னிந்திய திருநங்கைகள... மேலும் பார்க்க

``நேற்று வந்த விஜய் சாரைப் பார்த்து உதய் அண்ணா பயப்படுறார்ன்னு சொல்றதை...'' - திவ்யா சத்யராஜ் பேட்டி

சமீபத்தில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யாராஜ் பதிவிட்ட கருத்து, சமூக வலைதளங்கள் எங்கும் பேசுபொருளாகி இருக்கிறது.அதுவும், “அஜித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பெண்களைத் அவமதிப்பதில்லை. அவர்கள் கோழைகள்... மேலும் பார்க்க

'தோனியை ரொம்ப பிடிக்கும், அவரால்தான்...' - தோனி குறித்து நெகிழும் மீனாட்சி சௌத்ரி

நடிகை மீனாட்சி சௌத்ரி தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் பற்றி கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் பேசியிருக்கிறார்.‘தி கோட்’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட படங்களின் மூலம் திரையுலகில் கவனம் பெற்றவர... மேலும் பார்க்க

India - Pakistan: `வலிமை மற்றும் வீரியத்துடன் கையாண்ட மோடிக்கு எனது பாரட்டுகள்'- ரஜினிகாந்த்

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட்டன.இதனால் பாகிஸ்தான்... மேலும் பார்க்க

' என்னுடைய சிறந்த தருணங்கள் எல்லாவற்றுக்கு பின்னாலும் அம்மாதான் இருந்தாங்க'- நெகிழும் மீனா

நடிகை மீனா அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அம்மாவிற்கு வாழ்த்து தெரிவித்து நெகிழ்ச்சியானப் பதிவு ஒன்றரைப் பதிவிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "மக்கள் இந்த சினிமா மூலமான ஈர்ப்பையும், ... மேலும் பார்க்க

'தம்பியின் கனவை அண்ணன்கள் நிறைவேற்றி இருக்காங்க' -பிரேம்குமாருக்கு THAR பரிசளித்த சூர்யா, கார்த்தி

‘96’ பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில், கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில், சூரியாவின் 2D நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் ‘மெய்யழகன்’. இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப்... மேலும் பார்க்க