செய்திகள் :

Senthil Balaji : `பிணையில் வெளிவந்த செந்தில் பாலாஜி அமைச்சரானது மிகப்பெரிய தவறு' - உச்ச நீதிமன்றம்

post image

வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி, பண மோசடி செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக பணியமர்த்தியது 'மிகப் பெரிய தவறு' என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் பல சாட்சியங்கள் அரசு அதிகாரிகள் என்பதைச் சுட்டிக்காட்டியது. மேலும் செந்தில் பாலாஜிக்கு எதிராக நிலுவையில் இருக்கக்கூடிய பிற வழக்குகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Senthil Balaji

``ஒருவர் விடுதலை பெற்ற உடனேயே அவரை அமைச்சராக்குவது சாதாரணமாக இருக்க முடியாது, இதில் ஏதோ மிகப் பெரிய தவறு நடந்திருக்கிறது. ஏனென்றால் அங்கு வேறு வழக்குகள் இருக்கலாம், வேறு யாராவது குற்றவாளியாக கட்டமைக்கப்படலாம். நாம் வழக்கின் உண்மைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்" என நீதிமன்றம் குறிப்பிட்டது.

நீதிபதிகள், செந்தில் பாலாஜி குறித்த வழக்குகளில் விசாரிக்கப்பட வேண்டிய சாட்சிகளின் பதிவுகளைக் கோரினர். அதில் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர், சாட்சிகள் மற்றும் சாட்சிகளாக உள்ள அரசு ஊழியர்கள் எத்தனை பேர் என்பதையும் குறிப்பிட வேண்டும் என்றனர்.

இன்னும் விசாரணை நடத்தவேண்டியவர்கள் விவரங்களை உற்றுநோக்கிய நீதிமன்றம், அரசு அதிகாரிகள் மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட பணத்தை இழந்த பொது மக்களும் சாட்சியாக இருப்பதை எடுத்துரைத்தனர்.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அமலாக்கத்துறை சார்பாக வாதாடினார். அவர் செந்தில் பாலாஜிக்கு கணிசமான செல்வாக்கு இருப்பதை நிறுவினார்.

supreme court

``அவர் (செந்தில் பாலாஜி) சிறையில் இருந்தபோதும்கூட இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். அவர் மாநிலத்தில் அந்த செல்வாக்கைப் பயன்படுத்துகிறார்" என்றார் மேத்தா.

இதற்கு எதிராக செந்தில் பாலாஜி சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "எந்த மாநிலத்திலும் செல்வாக்கு மிக்க பலர் இருக்கின்றனர், இங்கே இலாகா இல்லாத ஒருவர் இருக்கிறார்" என வாதாடினார்.

"இது ஒன்றும் அரசியல் தளம் அல்ல, இதை நீதிமன்றமாக இருக்க விடுங்கள்" என்றார் மேத்தா.

மனுதாரர் சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், இந்த வழக்கில் பல சாட்சியங்கள் மாநில அரசின் அதிகாரிகள் என்ற வாதத்தை முன்வைத்தார்.

அதையடுத்து, இந்த வழக்கு விசாரணை ஜனவரி 15, 2025 தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி வேண்டுமென்றே விசாரணை நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை தாமதப்படுத்த முயல்வதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.

செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டது முதல், இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை தடம் புரண்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

அன்று `கூட்டணி’ கணக்கில் தொடங்கிய 'ராமதாஸ், அன்புமணி' மோதல் - பிரச்னையும் பின்னணியும்

தந்தை vs மகன்கடந்த 28.12.2024 அன்று விழுப்புரம், பட்டானூரில் பா.ம.க-வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, வன்னியர் சங்கத் தலைவர் அரு... மேலும் பார்க்க

TVK: அனுமதியின்றி மக்களுக்கு கொடுக்கப்பட்ட விஜய்யின் கடிதம்; தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கைது

தவெக கட்சி பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டிருக்கிறார்.அண்ணா பல்லைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தவெக தலைவர் விஜய் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அந்த கடிதத்தை நகல... மேலும் பார்க்க

`வரவேற்ற அண்ணாமலை; Elite அரசியலென விமர்சிக்கும் வன்னியரசு' - விஜய் ஆளுநர் சந்திப்பும் அரசியலும்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் வெடித்துள்ளன. இன்று காலையில் இந்த சம்பவம் தொடர்பாக கைப்பட எழுதிய அறிக்கையை வெளியிட்ட தவெக தலைவர் விஜ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: பாஜகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்; மாவட்டத் தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; காரணமென்ன?

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க தலைவராக இருந்து வந்த கதிரவன் என்பவர், சில ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்டு இயற்கை விவசாய ஆர்வலரான தரணி முருகேசன் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தரணி முருகேசனைக... மேலும் பார்க்க

"பெண்ணுக்கு பாதுகாப்பை உறுதி செய்யாத திராவிட 'Disaster Model' மாடல்'' - ஸ்டாலினை சாடிய அண்ணாமலை

“ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவல ஆட்சி தான் இந்த திராவிட Disaster Model,” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்... மேலும் பார்க்க

TVK Vijay: `சட்டம் ஒழுங்கு டு ஒன்றிய அரசின் நிதி’ ஆளுநரை சந்தித்த விஜய் - மனுவில் உள்ளது என்ன?

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், அண்ணா பல்கலைகழக மாணவி பாதிக்கப்பட்ட விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. முதலில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட விஜய், பின்னர் பெண்களுக்கு கைப்பட கடிதம் எழுதினார். இந... மேலும் பார்க்க