செய்திகள் :

TVK Vijay: `சட்டம் ஒழுங்கு டு ஒன்றிய அரசின் நிதி’ ஆளுநரை சந்தித்த விஜய் - மனுவில் உள்ளது என்ன?

post image

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், அண்ணா பல்கலைகழக மாணவி பாதிக்கப்பட்ட விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. முதலில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட விஜய், பின்னர் பெண்களுக்கு கைப்பட கடிதம் எழுதினார். இந்த நிலையில் இன்று ஆளுநரை சந்தித்தார் விஜய். சமீபமாக தொடரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, அத்துமீறல் என தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு கேள்விக்குள்ளாகியிருக்கிறது என எதிர்க்கட்சிகள் போராடி வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

விஜய்

இந்த சந்திப்பு குறித்து வெளியான தகவலில், அண்ணா பல்கலைக் கழக விவகாரம் தொடர்பாக முதல்முறையாக ஆளுநரை சந்தித்திருக்கும் த.வெ.க தலைவர் விஜய், மூன்று பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை ஆளுநர் ரவியிடம் வழங்கியிருக்கிறார் என சொல்லப்படுகிறது. அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஞானசேகரனின் பின்னணி குறித்தும், விசாரணை முறையாக நடத்தவேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்தது. வெளியே வந்த விஜய், செய்தியாளர்களை சந்திக்கவில்லை. எனினும் கட்சி பொதுச் செயலாளர் பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

அதில், ``இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தலைமையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தோம். எங்கள் மனுவில் தம்ழிநாட்டின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறோம்.

மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. எங்கள் கோரிக்கையைக் கேட்ட ஆளுநர் அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார். ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமக: `அன்புமணியுடன் கருத்து வேறுபாடு இல்லை... முகுந்தன்தான் இளைஞரணி தலைவர்!' – மருத்துவர் ராமதாஸ்

புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில், தமிழ்நாடு – புதுச்சேரி பா.ம.கவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் 2024 டிசம்பர் 28-ம் தேதி நடைபெற்றது. பா.ம.க நிறுவனர் மருத்துவர் ... மேலும் பார்க்க

கழுகார்: `கடுப்பில் மாண்புமிகுவும் மக்கள் பிரதிநிதியும்’ டு `ஓடும் வேட்பாளர்கள்; திண்டாடும் அதிமுக’

அட்வைஸ் செய்த தலைமை… அடக்கி வாசிக்கும் ‘கிரீன்’ மாஜி!“இனி, பகைக்கக் கூடாது..!”சூரியோதய மாவட்ட இலைக் கட்சியில், சுந்தரமானவருக்கு டஃப் ஃபைட் கொடுத்துவந்தார் ‘கிரீன்’ மாஜி. சுந்தரமானவரின் நடவடிக்கைகள் ஒவ... மேலும் பார்க்க

'யாராக இருந்தாலும் கைதுசெய்ய வேண்டும்!' - அண்ணா பல்கலைக்கழகச் சம்பவம் குறித்து திருமாவளவன் பேச்சு

கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொந்தரவிற்கு உள்ளானது, தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து சென்னை விமான நிலையத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவனிடம் ப... மேலும் பார்க்க

ட்ரம்ப் ஹோட்டல் வெளியே வெடித்த டெஸ்லா கார்; ``தீவிரவாத நடவடிக்கையாக இருக்கலாம்" - எலான் மஸ்க்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்புக்கு சொந்தமான ட்ரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டல் இருக்கிறது. நேற்று ஹோட்டல் நுழைவாயிலில் ட்ரம்பின் நெருங்கிய நண்பரான... மேலும் பார்க்க

`நாம் ஆண்ட பரம்பரை...' - அமைச்சர் மூர்த்தி பேச்சால் சர்ச்சை!

சமூகநீதிக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வரும் திராவிட மாடல் அரசு என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் தி.மு.க அரசில், வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக உள்ள பி.மூர்த்தி, சமுதாய விழா ஒன்றில் க... மேலும் பார்க்க

Happy New Year 2025 | வைகோவின் சபதம்; EPS-ன் சந்தேகம்; OPS-ன் பதில் | DMK | BJP | Imperfect Show

இன்றைய (02-01-2025) இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* New Year 2025!* சென்னையில் புத்தாண்டு வாகன தணிக்கையின் போது பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட 242 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன! * ஆள் கடத்தலில் ஈடுபட்ட... மேலும் பார்க்க