ரோஹித் சர்மா ஓய்வு பெற்றாலும் ஆச்சரியமில்லை: முன்னாள் தலைமைப் பயிற்சியாளர்
TVK: அனுமதியின்றி மக்களுக்கு கொடுக்கப்பட்ட விஜய்யின் கடிதம்; தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கைது
தவெக கட்சி பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அண்ணா பல்லைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தவெக தலைவர் விஜய் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அந்த கடிதத்தை நகல் எடுத்து தவெக கட்சியினர் பொதுமக்களுக்கு கொடுத்து வருகின்றனா். மாநிலம் முழுவதும் தவெக தொண்டர்கள், விஜய் எழுதிய அந்த கடிதத்தை கொடுத்து வருகின்றனா். அந்தவகையில் சென்னை தி நகர், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் தவெக தொண்டர்கள், பொதுமக்களுக்கு விஜய் எழுதிய கடிதத்தை கொடுத்து வந்தனர்.
அப்போது இந்த செயலை அனுமதியின்றி செய்ததாகக் கூறி தவெகவினரை போலீஸார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனா். அப்போது அவர்களைக் காண தவெக கட்சி பொதுச் செயலாளர் ஆனந்த் சென்றார். அந்த சமயத்தில் ஆனந்தையும் போலீஸார் கைது செய்திருக்கின்றனர். அவரது கைதுக்கு தவெக தொண்டர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனா்.