ரிஷப் பந்த் இதனை புரிந்துகொள்ள வேண்டும்; எதைக் கூறுகிறார் ரோஹித் சர்மா?
இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த், இரண்டு இன்னிங்ஸ்களிலும் மிகவும் முக்கியமான தருணத்தில் ஆட்டமிழந்தார். முக்கியமான தருணத்தில் ஆட்டமிழந்தார் என்பதோடு, அவர் தேர்வு செய்து விளையாடிய ஷாட்டுகள் பெரும் பேசுபொருளானது.
இதையும் படிக்க: மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறேன்; தோல்விக்குப் பிறகு ரோஹித் சர்மா!
இக்கட்டான நிலையில் முதல் இன்னிங்ஸில் ரிஷப் பந்த் விளையாடிய ஷாட்டினை, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், முட்டாள்தனமான ஷாட் என கடுமையாக சாடியிருந்தார். இரண்டாவது இன்னிங்ஸிலும் அதிரடியான ஷாட்டுக்கு முயற்சி செய்து முக்கியமான தருணத்தில் ரிஷப் பந்த் விக்கெட்டினை இழந்தார்.
ரிஷப் பந்த் புரிந்துகொள்ள வேண்டும்
ஆட்டத்தின் மிகவும் முக்கியமான தருணங்களில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்த நிலையில், ரிஷப் பந்த்திடமிருந்து அணி என்ன எதிர்பார்க்கிறது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து!
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி ரிஷப் பந்த்திடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். அவர் விளையாடும் விதம் குறித்து நாம் அனைவரும் பேசுவதைக் காட்டிலும், அவரே அதனை புரிந்துகொண்டு சரிசெய்வதற்கான வழியைக் கண்டறிய வேண்டும். ஆட்டத்தின் சூழலைக் கருத்தில் கொண்டு விளையாட வேண்டும். ரிஸ்க்கான ஷாட்டுக்கு முயற்சி செய்யும்போது, நாம் எதிரணியை ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறோம் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.