செய்திகள் :

Sexsomnia: ``ஒப்புதல் இல்லாமல் பாலியல் உறவில் ஈடுபட்டவர் குற்றமற்றவர் என தீர்ப்பு'' - ஏன்?

post image

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி நகரில், டிமோதி மால்கம் ரோவ்லேண்ட் என்ற நாற்பது வயது நபர், செக்ஸோமேனியா என்ற நோய் இருப்பதனால் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய வழக்கில் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு டிமோதியின் அப்பார்ட்மெட்டில் அவருடன் இரவைக் கழித்த பெண்ணின் அனுமதியில்லாமல் உறவு கொண்டுள்ளார்.

Sexsomnia?

இதுகுறித்த விசாரணையில் அவருக்கு செக்ஸோமேனியா இருப்பதாகத் தெரிவித்துள்ளார். செக்ஸோமேனியா என்பது தூக்கத்தில் ஒருவருடன் பாலுறவு கொள்ளும் நோய்.

நடுவர் மன்றம், "ஒருவர் சுய நினைவின்றி இருக்கும்போது செய்யும் குற்றத்திற்கு சட்டப்படி என்ன விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பியது.

நீதிபதி, "இது மிகவும் ஆபத்தான லாஜிக்" என்றார்.

Sexsomnia

எனினும் இந்த விவகாரத்தில் ஏற்கெனவே அமலிலிருக்கும் சட்டங்களை வைத்தே தீர்ப்பு வழங்க வேண்டும். இப்படி சட்டம் இருந்திருக்கலாம் என்ற விருப்பத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க கூடாது என்றும் வாதாடப்பட்டது.

"சட்டரீதியில் ஒருவருக்கு தனது நடத்தைகளில் கட்டுப்பாடு இல்லாத சூழலில் அவரின்செயல்பாடுகளுக்காக நாம் அவரை தண்டிக்க முடியாது" என்றார் நீதிபதி.

மேலும், "செக்ஸோமேனியா குறித்து எந்த சட்டங்களும் இல்லை என்பதால் அதைக் கொண்டிருப்பதைக் குற்றமாக கருத முடியாது" என்றார்.

மது விருந்து

என்ன நடந்தது?

புகார் அளித்த பெண் டிமோதியுடன் ஒரு மது விருந்துக்கு சென்றுள்ளார். இருவரும் ஒன்றாக டிமோதியின் அறைக்கு திரும்பி, குளித்துள்ளனர். அந்த பெண்ணும் டிமோதியின் படுக்கையிலேயே தூங்கியிருக்கிறார்.

காலை எழுந்தபோது, போதை தெளிந்ததும் இருவரும் உடலுறவு கொண்டதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார் அந்தப் பெண். இந்த வழக்கு நடந்தபோது டிமோதிக்கு செக்ஸோமேனியா இருந்ததை அவர் மறுக்கவில்லை.

'உண்மையில் உடலுறவில் இருந்தபோது அவர் தூக்கத்தில் தான் இருந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்' என எதிர்த்தரப்பு கேட்டபோது நீதிபதியே, "அவர் தூக்கத்தில் இல்லை என்பதற்கு ஆதாரம் இல்லை" என பதிலுரைத்து வழக்கை முடித்து வைத்திருக்கிறார்.

சிறுமலை: வெடிமருந்துடன் ஆண் சடலம் மீட்கப்பட்ட விவகாரம்; துப்பு துலக்கிய போலீஸ்!

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை 17 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதி அருகே புதருக்குள் ஒரு ஆண் சடலம் கிடந்தது. போலீஸார், வனத்துறையினர் விசாரிக்க சென்றபோது அருகே கிடந்த பேட்டரி, ஒயர்கள், வெடி மருந்து கிடந்துள்... மேலும் பார்க்க

Haryana: 'நஷ்டமான தொழில்... காப்பீட்டுத் தொகையைப் பெறக் கொலை' - சினிமா பாணி சம்பவம்; என்ன நடந்தது?

ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்தவர் ராம்மெஹர். கொரோனா பேரிடர் காலத்திற்கு முன்பு, தொழிற்சாலை நடத்தி வந்த இவர், லாக் டவுனின் போது இவரது தொழிற்சாலை பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதனால், அவரது கடன் அ... மேலும் பார்க்க

அம்பத்தூர்: பேட்மிட்டன் பயிற்சியாளர் கொலை வழக்கில் மூவர் சரண்; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

அம்பத்தூர் டீச்சர் காலனியைச் சேர்ந்தவர் தினேஷ்பாபு. பேட்மிட்டன் பயிற்சியாளரான இவர், தந்தையின் கட்டிட ஒப்பந்த வேலைகளையும் கவனித்து வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தினேஷ்பாபு தனியாக... மேலும் பார்க்க

Seeman : சீமானிடம் கேட்கப்பட்ட கேள்விகள்; வீடியோ பதிவு - சமரசம் பேசியவர்களை விசாரிக்க முடிவு?

ஆஜரான சீமான்நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் மீது நடிகை பாலியல் புகாரை கடந்த 2011-ம் ஆண்டு கொடுத்தார். அதன்பேரில் சீமான் மீது பாலியல் வன்கொடுமை, மோசடி உள்பட 6 பிரிவுகளின... மேலும் பார்க்க

Tamannaah: கிரிப்டோகரன்சி மோசடி வழக்கு; தமன்னாவிற்குத் தொடர்பா? விசாரிக்க புதுச்சேரி போலீஸ் திட்டம்

நடிகை தமன்னா பாடியா கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது.ரூ.2.4 கோடி கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக அவரிடம் பாண்டிச்சேரி போலீஸார் விச... மேலும் பார்க்க

சிறுமலை: புதருக்குள் ஆண் சடலம்; அருகே கிடந்த பொருள் வெடித்ததில் போலீஸார் காயம்; நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டத்தின் குட்டிக்கொடைக்கானல் என்றழைக்கப்படும் சிறுமலையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் 17 ஆவது கொண்டை ஊசி வளைவில் உள்ள வாட்ச்சிங் டவர் அருகே காட்டுப்பகுதியில் துர்நாற்றம் வீசியத... மேலும் பார்க்க