ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?
Shreyas Iyer: 'இந்திய டி20 அணியில் இடம்பெற ஸ்ரேயஸ் வேறு என்ன செய்ய வேண்டும்?' - ஸ்ரேயஸ் தந்தை வேதனை
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.
இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை ஆகஸ்ட் 19 ஆம் தேதி பிசிசிஐ வெளியிட்டிருந்தது.
இந்த அணியில் ஸ்ரேயஸ் ஐயர், சாய் சுதர்ஷன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் இந்திய அணியில் ஸ்ரேயஸ் இடம்பெறாதது குறித்து அவரது தந்தை சந்தோஷ் ஐயர் பேசியிருக்கிறார். இது தொடர்பாகப் பேசிய அவர், " இந்திய டி20 அணியில் இடம் பிடிக்க ஸ்ரேயஸ் வேறு என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியவில்லை.

அவரை இந்திய கேப்டனாக்குங்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் குறைந்தபட்சம் அணியில் தேர்ந்தெடுங்கள். அணியில் இருந்து அவரை நீக்கியதால் யாரையும் அவர் குறை கூறமாட்டார். ஆனாலும், உள்ளுக்குள் இயல்பாகவே ஏமாற்றம் அடைந்திருப்பார்" என்று வேதனைத் தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...