செய்திகள் :

Sikandar: "ராஷ்மிகாவின் மகளுடனும் நடிப்பேன்" - சர்ச்சையான சல்மான் கானின் பேச்சு; பின்னணி என்ன?

post image
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்துள்ள 'சிக்கந்தர்' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது.

37 ஆண்டுகளாகப் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சல்மான் கான். 'ஹம் ஆப்கே ஹைன் கோன்', 'வான்டெட்', 'தபாங்', 'பாடிகார்ட்' என ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார்.

சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. 

இந்நிலையில் தமிழ் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து 'சிக்கந்தர்' என்ற படத்தில் நடித்து வந்தார். இத்திரைப்படம் ரம்ஜானை முன்னிட்டு வரும் மார்ச் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

சல்மான் கான்

இத்திரைப்படத்தில் சல்மான் கான், அவரை விடவும் 31 வயது குறைவாக இருக்கும் ராஷ்மிகாவுடன் நடிப்பதாகப் பாலிவுட் வட்டாரத்தில் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான், "எல்லோரும் 31 வயது வித்தியாசம் உள்ள கதாநாயகியுடன் நான் நடித்து வருவதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கதாநாயகிக்கும் அவரது தந்தைக்குமே அது குறித்து எந்த பிரச்னையும் இல்லாத போது உங்களுக்கு என்ன பிரச்னை?

நாளை கதாநாயகிக்குத் திருமணம் நடந்து அவரது மகள் சினிமாவில் நாயகி ஆகலாம். அப்போது அவருடனும் நான் நடிப்பேன். அதற்கு அவரது அம்மாவின் (ராஷ்மிகா) ஒத்துழைப்பும் கிடைக்கும்" என்று பேசியுள்ளார்.

நடிகர் சல்மான் கான், ராஷ்மிகா

சல்மான் கானின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் கேலிக்கும் சர்ச்சைக்கும் உள்ளாகி இருக்கிறது.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

நடிகர் சல்மான் கான் அணிந்த ரூ.34 லட்சம் மதிப்பிலான ராம ஜென்மபூமி கைக்கடிகாரம்... சிறப்பம்சம் என்ன?

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் சிகந்தர் படம் வரும் 30ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் சல்மான் கான் பலத்த பாதுகாப்புடன் கலந்து வருகிறார். அவ்வாறு கலந்... மேலும் பார்க்க

Salman Khan: ``என் வாழ்க்கை கடவுள் கையில்'' - லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் குறித்து சல்மான் கான்

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு டெல்லியைச் சேர்ந்த மாபியா கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடு... மேலும் பார்க்க

``ரூ.90 கோடி கடன், நடந்து சென்றேன்; இப்போது ரூ.3000 கோடிக்கு சொத்து..'' -மனம் திறந்த அமிதாப்பச்சன்

நடிகர் அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில் சொந்தமாக படங்கள் தயாரித்து நஷ்டமடைந்து கடுமையான கடன் தொல்லைக்கு ஆளானார். அமிதாப்பச்சன் ரூ.90 கோடி கடன் கொடுக்கவேண்டியிருந்தது. தினம் தினம் கடன் கொடுத்தவர்கள் அவரது வ... மேலும் பார்க்க

Akshay Kumar: ``அந்தப் படம் சரியா போகல, அக்‌ஷய் குமார் சம்பளமும் வாங்கல''- ப்ரித்விராஜ்

̀எல் 2: எம்புரான்' படத்திற்கான புரொமோஷன் பணிகளுக்காக இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்குப் பயணித்து வருகிறார் நடிகர் ப்ரித்விராஜ். அந்த நிகழ்வுகளில் பல்வேறு சுவரஸ்யான தகவல்களையும் பகிர்ந்து வருகிறார். அந... மேலும் பார்க்க

கொரிய படத்தை ரீமேக் செய்ய சொன்ன சல்மான்கான்; மறுத்த ஏ.ஆர்.முருகதாஸ் - சிகந்தர் படம் உருவானது எப்படி?

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சல்மான் கான் நடித்து உருவாகி இருக்கும் சிகந்தர் படம் வரும் 30ம் தேதி திரைக்கு வருகிறது. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தை சல்மான் கானும்... மேலும் பார்க்க

Dhoni: 'அனிமல்' ரன்பீர் கபூராக தோனி... வைரலாகும் சந்தீப் ரெட்டி வாங்காவுடனான தோனியின் விளம்பரம்!

ரிஷப் பண்ட்டின் சகோதரி நிச்சயதார்த்த விழா, ஐ.பி.எல் பயிற்சி, விளம்பரங்கள் என இப்போது எங்கும் தோனிதான் இருக்கிறார். தற்சமயம் ஐ.பி.எல் போட்டிக்கான பயிற்சியில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார் தோனி. இதற்கிடை... மேலும் பார்க்க