செய்திகள் :

TASMAC: `இந்திரா நினைவு குடியிருப்பில் டாஸ்மாக் திறப்பு' - முற்றுகையிட்டு போராடும் மக்கள்

post image

நாகப்பட்டினம் அருகே உள்ளது ஒரத்தூர். இங்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நேற்று மதியம் திடீரென புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

இதை கண்டு அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர். இந்திர நினைவு குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டை டாஸ்மாக் கடை திறப்பதற்கு ஏற்ற வகையில் மாற்றி கடை திறந்ததும் அப்பகுதியினரை வேதனைகுள்ளாக்கியது. வீட்டில் டாஸ்மாக் திறப்பதற்கு டாஸ்மாக் அதிகாரிகள் எப்படி அனுமதி கொடுத்தனர் என்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

நாகை, ஒரத்தூர் போராட்டம்

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது, ``டாஸ்மாக் கடையை திறக்காதே, ஏழைகள் வாழ்வை அழிக்காதே, இளைஞர்களின் எதிர்காலத்தை வீணாக்காதே, டாஸ்மாக் கடையை மூடும் வரை போராடுவோம், சாகும் வரை போராடுவோம்'' என்று கோஷங்கள் எழுப்பினர். இதையறிந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அப்பகுதியினரிடம் பேசினோம், "எங்க ஊரில் பல ஆண்டுகளாக சாராயம் விற்பனையில் யாரும் ஈடுப்பட்டது கிடையாது. இதையே எங்களுடைய அடையாளமாக்கி வாழ்ந்து வருகிறோம். பல கிராமங்களில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டும் எங்கள் ஊரில் டாஸ்மாக் வராமல் பார்த்துக்கொண்டோம். இந்த நிலையில், நேற்று திடீரென புதிய டாஸ்மாக் கடையை திறந்தனர்.

டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம்

இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தொகுப்பு வீட்டை டாஸ்மாக் கடை நடத்துவதற்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள் என தெரியவில்லை.

வீட்டு உரிமையாளர் ஒப்புதல் அளித்தாலும் அதிகாரிகள் வீட்டை கடையாக மாற்றுவதற்கு அனுமதி அளித்திருக்க கூடாது. எங்க பகுதி மக்கள் இப்போது வரை நிம்மதியாக வாழ்கிறார்கள்.

இங்கு திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக்கால் நிச்சயம் எங்களுடைய நிம்மதி பறிபோகும். எனவே ஊரின் நலனுக்காகவும், மக்களின் வாழ்க்கை வளம் பெறவும் இங்கு திறக்கப்பட்ட டாஸ்மாக்கை நிரந்தரமாக மூட வேண்டும். அதுவரை எங்கள் போடாட்டம் தொடரும்" என்றனர்.

”தெருவைக் காணவில்லை” - ஜி.பி.முத்து புகார்; வீட்டை முற்றுகையிட்ட ஊர் மக்கள்; போலீஸ் குவிப்பு

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி- பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. ஜி.பி.முத்து என்ற பெயரில் யூ-டியூப்பில் இவர் பிரபலம்.இதே பகுதியில் உச்சினிமாகாளி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் தற்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: 4 முறை பேச்சுவார்த்தை தோல்வி; 5-வது நாளாக அனல்மின் நிலைய ஊழியர்கள் போராட்டம்!

தூத்துக்குடியில் மத்திய அரசுக்கு சொந்தமான என்.டி.பி.எல் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது இங்கு இரண்டு அலகுகள் மூலம் 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் இங்கு 300 பெண் ஊழ... மேலும் பார்க்க