செய்திகள் :

Thudarum : `அந்த திரைக்கதை என்னுடையது!' - மோகன்லால் படத்தின் மீது கதைத்திருட்டு புகார்

post image

இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில், மோகன்லால், ஷோபனா நடிப்பில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படம் ‘துடரும்’. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

‘துடரும்' படத்தில்...
‘துடரும்' படத்தில்...

ஓடிடியில் வெளியான பிறகும் நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இந்நிலையில் ‘துடரும்’ படத்தின் கதை 2020 ஆம் ஆண்டு தான் இயக்கியிருந்த 'தீயாட்டம்' படத்திலிருந்து திருட்டப்பட்டிருப்பதாக இயக்குநர் சனல் குமார் சசிதரன் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

இதுதொடர்பாக சனல் குமார் சசிதரன் வெளியிட்டிருக்கும் பதிவில், “ நான் ‘துடரும்’ படத்தைப் பார்த்தேன். இதன் திரைக்கதை 2020-ல் நான் எழுதிய 'தீயாட்டம்' படத்தில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. ‘கொன்றால் பாவம் தின்றால் தீரும்' என எனது திரைக்கதையில் ஒரு முக்கியமான வசனம் இடம்பெற்றிருக்கும்.

சனல் குமார் சசிதரன்

அந்த வசனத்தை இப்படத்தில் பயன்படுத்தி இருக்கின்றனர். இந்தப் படத்தில் அந்த வசனம் முற்றிலும் தேவையற்றதாக இருந்தாலும் அதனை பயன்படுத்தி இருகின்றனர். என்னுடைய படத்தில் ஹீரோ ஆட்டோ ட்ரைவராக இருப்பார். இங்கே மோகன்லால் கார் ட்ரைவராக இருக்கிறார். விரைவில் எனது திரைக்கதையை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Anupama: ``சிம்ரன், அசினுக்கு நடந்ததுதான் அனுபாமாவுக்கு நடக்கிறது!'' - சுரேஷ் கோபி ஓப்பன் டாக்

சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா' திரைப்படம் இம்மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் அனுபம... மேலும் பார்க்க

Dileep: "காதல் மற்றும் குடும்ப உறவுகளின் மாறிவரும் நிலையைப் பிரதிபலிக்கும் கதை!" - நடிகர் திலீப்

மலையாளத் திரையுலகில் நடிகர் திலீப் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ப்ரின்ஸ் & ஃபேமிலி. இது நடிகர் திலீப்பின் 150-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. திரையரங்க... மேலும் பார்க்க

Premalu 2 Update: 'ப்ரேமலு 2' திரைப்படம் கைவிடப்படுகிறதா? - என்ன சொல்கிறார் படத்தின் தயாரிப்பாளர்

கடந்தாண்டு மலையாளப் படங்கள் பலவற்றை தமிழ் சினிமாவிலும் தூள் கிளப்பியிருந்தன. அந்த வரிசையில் 'ப்ரேமலு', 'மஞ்சும்மல் பாய்ஸ்' உட்பட பல மலையாள படைப்புகள் கடந்தாண்டு பல பக்கங்களிலும் கவனம் ஈர்த்திருந்தன. ச... மேலும் பார்க்க

Mohanlal: "பிரேம் நசீரைப் பற்றி அவர் தப்பா பேசினார்; அதனால அறைஞ்சுட்டேன்..." - மோகன்லால் ஓப்பன் டாக்

சமீபத்திய பேட்டி ஒன்றில் மோகன்லால் தன்னுடைய கோபம் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். ‘எம்புரான்’ படத்தைத் தொடர்ந்து ‘துடரும்’ படத்தில் நடித்திருந்... மேலும் பார்க்க

Lokah: சூப்பர் ஹீரோயின் ஆக களமிறங்கும் கல்யாணி பிரியதர்ஷன் - வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர்

இந்திய திரைப்படங்களில் பெரும்பாலும் சூப்பர் ஹீரோ கதைப் படங்கள் குறைவாகவே வெளியானாலும் அதில் எல்லாமே ஆண்கள் தான் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கின்றனர். பெண்கள் சூப்பர் ஹீரோ ஜானரில் பெரிதாக நடித்ததில்லை. ... மேலும் பார்க்க

Shine Tom Chacko: ``அவருக்குப் பலமுறை அறிவுரையும் சொல்லியிருக்கிறேன்'' - நடிகர் ஆசிஃப் அலி வருத்தம்

மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர் ஷைன் டாம் சாக்கோ. சமீபத்தில்கூட அஜித்தின் 'Good Bad Ugly' திரைப்படத்தில் சிறு கதாபாத்திரல் நடித்து கவனம் ஈர்த்திருந்தார். மலையாளம், தமிழ் என இரண்டு திரையுலகிலும் தற்... மேலும் பார்க்க