செய்திகள் :

Trump: பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்கா; பாக்-இல் எண்ணெய் வளமா? ட்ரம்ப் கூறுவது உண்மையா?

post image

'பாகிஸ்தானுடன் இப்போது தான் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். அதன் படி, பாகிஸ்தானில் எண்ணெய் வளங்களை மேம்படுத்துவதில், அமெரிக்கா பாகிஸ்தானுக்கு உதவ உள்ளது.

இரு நாடுகளின் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஒரு எண்ணெய் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் இருக்கிறோம்.

யாருக்குத் தெரியும், ஒரு நாள், பாகிஸ்தான் இந்தியாவிற்கு எண்ணெய் விற்றுக்கொண்டிருக்கலாம்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது 'ட்ரூத்' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவிற்கும், ஒப்பந்தத்திற்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

குழப்பத்தில் உலகம்...

ட்ரம்பின் கூற்றுப்படி, பாகிஸ்தானில் ஏகப்பட்ட எண்ணெய் வளங்கள் உள்ளன. அதனை மேம்படுத்தவே அமெரிக்கா உதவ உள்ளது.

ஆனால், உலக நாடுகளுக்குத் தற்போது இருக்கும் குழப்பம் என்னவெனில், 'உண்மையிலேயே பாகிஸ்தானில் அவ்வளவு எண்ணெய் வளங்கள் உள்ளதா?' என்பதுதான்.

இந்தக் குழப்பத்திற்குக் காரணங்கள் இரண்டு உள்ளன.

ஒன்று, உண்மையிலேயே, இதுவரை பாகிஸ்தானில் எண்ணெய் வளம் இருப்பதற்கான ஆய்வுகளே போய்க்கொண்டிருக்கிறதே தவிர, பெரியளவில் எண்ணெய் வளங்கள் இருப்பது தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இன்னொன்று, பாகிஸ்தானே இப்போது வரை தங்களுக்குத் தேவையான எரிசக்திகளை இறக்குமதிதான் செய்து வருகிறது. பாகிஸ்தான் எண்ணெய் தயாரிக்கிறதுதான். ஆனால், அதுவும் மிக மிகக் குறைந்த அளவு மட்டுமே. அப்புறம் எப்படி..?

அப்படியிருக்கையில், ட்ரம்பின் கூற்று எப்படி உண்மை ஆகும் என்பதே உலகத்தின் குழப்பம் ஆகும்.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்

பிறகு ஏன் ட்ரம்ப் இதை கூறுகிறார்?

2015-ம் ஆண்டு, அமெரிக்காவின் எரிசக்தி தகவல் நிர்வாகம் (EIA) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதன்படி, பாகிஸ்தானில் 9.1 பில்லியன் பேரல் அளவிற்கான எண்ணெய் வளம் இருக்கலாம்.

அந்த அறிக்கையில், அப்படியான எண்ணெய் 3.8 மில்லியன் பேரல் இருக்கிறது என்றும் கூறப்பட்டிருந்தது.

இதை நம்பிதான் ட்ரம்ப் காலை எடுத்து வைத்துள்ளார்.

ஆனால், இது சாத்தியமா?

அந்த அறிக்கையில் இந்த எண்ணெய் 'Technically recoverable' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால், இந்த எண்ணெய் எடுக்கப்படலாம்... எடுக்கப்படாமலும் போகலாம்.

அப்படியே இதை எடுத்தாலும், எளிதாக இருந்துவிடாது. இதற்கு அட்வான்ஸ் டெக்னாலஜி தேவை. பில்லியன் கணக்கில் டாலர்கள் தேவைப்படும். எடுத்த உடனேயே இதை சக்சஸ் செய்துவிட முடியாது. பல வருடங்கள் பிடிக்கும். இதற்கெனத் தனி கட்டமைப்புகள் வேண்டும்.

அப்படி எடுக்கப்பட்ட எண்ணெய்யைப் பயன்படுத்தி விட முடியும் என்று கூறமுடியாது. மேலும், சில நேரங்களில் இந்த முயற்சி தோல்விகூட அடையலாம்.

எண்ணெய்
எண்ணெய்

பாகிஸ்தானுக்கு என்னென்ன மைனஸ்?

என்னதான் பாகிஸ்தான் அமெரிக்கா உடன் கூட்டுப் போட்டுச் செய்தாலும், பாகிஸ்தானும் ஒரு தொகையைக் கட்ட வேண்டும். ஒருவேளை, இந்த முயற்சி தோல்வி அடைந்தால், பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்.

பாகிஸ்தானில் நிச்சயம் எண்ணெய் வளங்கள் இருக்கிறது என்று கூறிவிட முடியாது. இது ஒரு சில ஆய்வின் அடிப்படைகளிலேயே எண்ணெய் வளங்கள் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அவ்வளவு தானே தவிர, நிரூபணம் எதுவும் இல்லை.

பாகிஸ்தானில் வளங்கள் பலுசிஸ்தான் பகுதியிலேயே அதிகம் இருக்கிறது எனச் சொல்லப்படுகிறது. ஆனால், பாகிஸ்தான் அரசுடன், பலுசிஸ்தானுக்கு நல்ல உறவு கிடையாது. அங்கு எப்போதுமே போராட்டங்கள் இருந்து வருகின்றன. அதனால், அந்தப் பகுதியை நம்பி பாகிஸ்தான் களத்தில் இறங்கிவிட முடியாது.

பாகிஸ்தான் கொடி
பாகிஸ்தான் கொடி

இந்தியா, பாகிஸ்தான் ஒப்பீடு!

'ஒரு நாள் பாகிஸ்தானுக்கு இந்தியாவிற்கு எண்ணெய்யை விற்கலாம்' என்று நக்கல் தொனியில் கமென்ட் செய்துள்ளார். அதனால், இந்தியா, பாகிஸ்தான் சின்ன ஒப்பீட்டைப் பார்க்கலாம்...

நிரூபணம் ஆன எண்ணெய் வளங்கள்:

இந்தியா - கிட்டத்தட்ட 4.8 - 5 பில்லியன் பேரல்கள்;

பாகிஸ்தான் - 353.5 மில்லியன் பேரல்கள் (உலக அளவில் 52-வது இடம்)

இதன் படி, பாகிஸ்தானில் 0.021 சதவிகித அளவு எண்ணெய் மட்டுமே ஒப்பீட்டளவில் உலக அளவில் உள்ளது. ஆனால், இந்தியாவின் அளவு இதற்கும் மேல்.

ஒரு நாளைக்கு எத்தனை எண்ணெய் உற்பத்தி?

இந்தியா - கிட்டத்தட்ட 5,80,000 பேரல்கள்;

பாகிஸ்தான் - 70,000 - 80,000 பேரல்கள்.

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்

ஒரு நாளைக்கு எவ்வளவு நுகர்வு?

இந்தியா - கிட்டத்தட்ட 4.5 மில்லியன் பேரல்கள்;

பாகிஸ்தான் - 5,56,000 பேரல்கள்

சொந்த தயாரிப்பில் தங்களது சொந்த தேவைகளை எவ்வளவு பூர்த்தி செய்துகொள்ள முடிகிறது?

இந்தியா - கிட்டத்தட்ட 13 - 15 சதவிகிதம்

பாகிஸ்தான் - 15 - 20 சதவிகிதம்

இறக்குமதிகள் செய்யாமல் எவ்வளவு நாள்களுக்குத் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்?

இந்தியா - 3 - 5 ஆண்டுகளுக்கு மேல்

பாகிஸ்தான் - 2 ஆண்டுகளுக்கும் குறைவு

பெட்ரோல் விலை

இந்தியாவில் சென்னையில் இன்று ஒரு லிட்டருக்கு ரூ.100.80

பாகிஸ்தான் - ஒரு லிட்டருக்கு ரூ.272.15

டீசல் விலை

இந்தியாவில் சென்னையில் இன்று லிட்டருக்கு ரூ.92.39

பாகிஸ்தான் - ஒரு லிட்டருக்கு ரூ.284.35

இரு நாடுகளுமே கிட்டத்தட்ட 85 சதவிகிதம் எண்ணெய் இறக்குமதியில் பிற நாடுகளைச் சார்ந்தேதான் இருக்கிறது.

இந்தக் கணக்கிலேயே ட்ரம்ப் பாகிஸ்தானை நம்புவது நல்லதா... இல்லையா என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"எனது வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவியை வைத்தது அன்புமணி தான்" - ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாகநீண்டுகொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமிருக்கிறார்கள்.கடந்த மாதம், "என் வீட்டிலேயே, நான் உட்கார்ந்திருக்கும் இடத்தி... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி திமுக MLA-வைத் திட்டிய MP தங்கதமிழ்செல்வன்; மேடையில் கடும் வாக்குவாதம்; என்ன நடந்தது?

ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் துவக்க விழாவில் ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் மற்றும் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டனர்.முகாமின் வரவேற்பு பேனரில் ஆண... மேலும் பார்க்க

'ஆணவக் கொலைகளுக்கு காரணம் கட்சிகள் அல்ல சமுதாய அமைப்பு'- கமல்ஹாசன் காட்டம்

நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கூட்டத்தொடரில் கலந்து கொண்ட பின் கமல்ஹாசன் சென்னை திரும்பி இருக்கிறார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நாடாளுமன்றத்தை வெளியில் இருந்து பார்த்திருக்... மேலும் பார்க்க

ட்ரம்பின் வரி யுத்தம் - சிக்கலில் இந்திய அமெரிக்க உறவுகள்? உடனடி விளைவுகள் என்னென்ன? | In Depth

முன்னாள் ஆசிரியர், பிபிசி உலகசேவை, லண்டன் கட்டுரையாளர்: மணிவண்ணன் திருமலைஇந்திய இறக்குமதிகள் மீது 25 சதவீதம் வரிவிதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜூலை 31ம் தேதி வெளியிட்ட அறிவிப்பு இந்திய அரசியல் மற்று... மேலும் பார்க்க

`DMK தாய் கழகம் தானே' - STALIN - OPS சந்திப்பு பின்னணி? | TRUMP MODI RAHUL |Imperfect Show 1.8.2025

* அதானிக்கு உதவுவதற்காக பாஜக பொருளாதாரத்தை அழித்துவிட்டது - ராகுல்.* அமெரிக்க வரி விதிப்பு: மத்திய அரசு தீவிர ஆலோசனை?* ஈரானுடன் வர்த்தகம் 6 இந்திய நிறுவங்களுக்கு தடை?* "உங்களை யாராவது மதம் மாற்றினார்க... மேலும் பார்க்க