உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
Trump tariffs: ``சீன அதிபர் புத்திசாலி; தன் நாட்டை அவர் நேசிக்கிறார்" - வரி விவகாரத்தில் ட்ரம்ப்
அமெரிக்க அதிபரக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க பொருள்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி, சீனாவுக்கு 34% வரி விதிப்பு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்தன. இதனையடுத்து ஏப்ரல் 9-ம் தேதி முதல் அனைத்து அமெரிக்க பொருள்களுக்கும் 34% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்தது (மொத்தம் 84% வரி).

இதற்கு பதிலடியாக சீனா மீது கூடுதலாக 50% வரி விதிப்பதாக அமெரிக்க ட்ரம்ப் அறிவித்தார். மேலும், சீனாவின் 34% வரியை திரும்பப் பெறவில்லையென்றால், சீனா மீது 125% கூடுதல் வரிகளை அமெரிக்கா விதிக்கும் என எச்சரிக்கை கொடுத்திருந்தார்.
ஆனால், அமெரிக்கா மீதான 34% வரிவிதிப்பை 24 மணி நேர கெடு முடிந்தும் சீனா திரும்பப் பெறவில்லை. இந்த நிலையில், அமெரிக்கா எச்சரிக்கை விட்டதன்படி சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 104% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா நேற்று (09-04-25) காலை அறிவித்துள்ளது.
இதற்கிடையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ``சீன அதிபர் ஜி ஜின்பிங் புத்திசாலி மனிதர். என்ன செய்ய வேண்டும் என்பதை சரியாக அறிந்த ஒரு மனிதர், அவர் தனது நாட்டை நேசிக்கிறார். அதனால், இரு நாடுகளும் ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்வோம். அமெரிக்காவில் முதலீடு செய்வது மிகப்பெரிய முதலீடாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

எங்களிடம் யாருக்கும் தெரியாத ஆயுதங்கள் உள்ளன. ஆனாலும் நான் ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதையே விரும்புகிறேன். அது அனைவருக்கும் நியாயமாக இருக்கும். இது ஒரு பேச்சுவார்த்தைக்கான அழைப்புதான். ஆனால், நீங்கள் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.