செய்திகள் :

TVK : 'பனையூரில் மாரத்தான் மீட்டிங்; குமுறிய நிர்வாகிகள்; சாந்தப்படுத்திய ஆனந்த்' - என்ன நடந்தது?

post image
விஜய்யின் த.வெ.க கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை விடிய விடிய நடத்தி முடித்திருக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த். அவசர அவசரமாக அழைப்பு விடுக்கப்பட்டதால் பரபரப்பாக சென்னையை அடைந்திருந்த நிர்வாகிகள் பனையூரிலேயே தங்கியிருந்து கூட்டத்தை முடித்துவிட்டு கிளம்பி சென்றிருக்கின்றனர். மாரத்தான் போல நடந்து முடிந்திருக்கும் விஜய் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் பற்றிய அப்டேட்ஸ் இங்கே.

'திடீர் மீட்டிங்!'

ஜனவரி 10 ஆம் தேதி, அதாவது நேற்று காலை பனையூர் அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங் இருப்பதாக தமிழகம் முழுவதுமுள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு சென்றிருந்தது. தலைமையின் உத்தரவுக்கிணங்க அத்தனை மாவட்ட நிர்வாகிகளும் பனையூரில் ஆஜராகியிருந்தனர். நேற்று காலை 10:30 மணிக்கு பனையூர் அலுவலகத்துக்கு வந்த ஆனந்த், 11:30 மணியிலிருந்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளாக தனித்தனியாக அழைத்துப் பேசத் தொடங்கினார். புதிய நிர்வாகிகள் நியமனம் பற்றிய சந்திப்பு என்பதால் சம்பிரதாயமான மீட்டிங்காக இல்லாமல், பல விஷயங்களும் ஆழமாக பேசப்பட்டிருக்கிறது. மாவட்டங்களுக்குள் இருக்கும் கோஷ்டி பூசல்களையும் முடிந்தளவுக்கு பேசி தீர்க்க ஆனந்த் முயன்றிருக்கிறார். தூத்துக்குடி, விருதுநகர், தேனி, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில்தான் பஞ்சாயத்து அதிகம் இருந்திருக்கிறது. ஒரு லிஸ்ட்டை கொடுத்து அந்த லிஸ்ட்டில் பெயர் இருக்கும் நிர்வாகிகளை மட்டுமே அலுவலகத்துக்குள் இருக்குமாறு ஆனந்த் அறிவுறுத்தியிருந்தார்.

'உள்ளடி பஞ்சாயத்துகள்!'

ஆனந்த் கொடுத்த லிஸ்ட்டில் பெயர் இல்லை எனக் கூறி நேற்று மதியம் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னஸ் தன்னுடைய ஆதரவாளர்களோடு அதிருப்தியோடு வெளியேறியிருந்தார். இவரின் குறித்து நாமும் முந்தைய செய்தியிலேயே குறிப்பிட்டிருக்கிறோம். அதிருப்தியாக கிளம்பிய அஜிதாவை மாலை 5 மணிக்கு மேல் வரச் சொல்லி ஆனந்த் பேசியிருக்கிறார். 'உங்கள் விஷயத்தில் முடிவை தளபதியே எடுப்பார்...' எனக் கூறி அஜிதா சமாதானம் செய்து அனுப்பப்பட்டிருக்கிறார். இப்படி பஞ்சாயத்தை கூட்டும் நிர்வாகிகளை விஜய் பெயரை சொல்லி அமைதிப்படுத்தும் வேலையும் செய்யப்பட்டிருக்கிறது.

'நிர்வாகிகளுக்கு அறிவுரை!'

நிர்வாகிகளுக்கு சில விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. அதில், நிர்வாகிகள் நியமனம் தொடர்பான சில அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி, கட்சிப் பொறுப்பில் நியமிக்கப்படும் நிர்வாகிகள் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே அந்த பதவியில் நீடிப்பார்கள் எனவும், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி என அத்தனை மட்டத்திலான நிர்வாகிகள் நியமனத்திலும் துணைச் செயலாளர் பதவிக்கு கட்டாயம் ஒரு பெண்ணையோ அல்லது பட்டியலினத்தவரையோ மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

மாவட்ட பஞ்சாயத்துகளை கேட்டுவிட்டு உரிய ஆலோசனை கூறிய ஆனந்த் இந்த விண்ணப்பங்களையும் நிர்வாகிகளிடம் வழங்கியிருக்கிறார். ஒன்றிய, நகர, பேரூராட்சி அளவில் நிர்வாகிகள் நியமனத்தில் போட்டி ஏற்பட்டால், கல்யாண மண்டபத்தை புக் செய்து கூடிப் பேசி சமசரமாக நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். முடியாதபட்சத்தில் வாக்கெடுப்பை கூட நடத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

'18 மணி நேர மாரத்தான் மீட்டிங்!'

நேற்று காலை 11:30 மணிக்கு கூட்டத்தை தொடங்கிய ஆனந்த் மாலை 6 மணி வரைக்குமே நான்கைந்து மாவட்ட நிர்வாகிகளுடன்தான் பேசி முடித்திருந்தார். இதனால் அப்போது வரை அழைக்கப்படாத நிர்வாகிகள் அங்கேயே தங்கியிருந்தனர். நீண்டு கொண்டே சென்ற நிர்வாகிகளுடனான ஆனந்தின் மீட்டிங் இன்று காலை 5:30 வரை சென்றிருக்கிறது. தொடர்ச்சியாக 18 மணி நேரத்திற்கு மேல் பேசிய பிறகும் சில மாவட்டங்கள் மீதமிருந்திருக்கிறது. அந்த மாவட்ட நிர்வாகிகளை இன்று பகல் வேளையில் சந்தித்து பேசி மாலையோடு அந்த மாரத்தான் மீட்டிங்கை முடித்திருக்கிறார் ஆனந்த்.

'பிப்ரவரி 2 - டார்கெட்!'

பிப்ரவரி 2 ஆம் தேதி விஜய் த.வெ.க கட்சியை ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவுபெறுகிறது. அதற்குள் பஞ்சாயத்துகளையெல்லாம் பேசி முடித்து நிர்வாகிகள் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதே டார்கெட். நிர்வாகிகள் அறிவிப்பை தை மாதத்தில் ஒரு வளர்பிறை நாளில் வைத்துக் கொள்ள தேதியும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனவரி 20 க்குப் பிறகு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை விஜய் நேரில் சந்தித்து ஆலோசனை வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.

த.வெ.க முகாமுக்கு பல ட்விஸ்ட்டுகளும் சர்ப்ரைஸ்களும் நிறைந்த பரபர பொங்கலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக சொல்லி தான் செய்தீர்களா?; `நான் சொல்லக்கூடாது, ஆனாலும் சொல்கிறேன்’ - வேல்முருகன் எக்ஸ்க்ளூஸிவ்

`பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத அரசியல் தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர், ஆளுநர் செயல்பாடு, ஆளும் கட்சி செயல்பாடு உள்ளிட்ட நமது பல்வேறு கேள்விகளுக்க... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி : அப்செட்டில் கதர்கள் - திமுக வசம் சென்ற பின்னணி!

ஈரோடு கிழக்குகடந்த 2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ-வாக திருமகன் ஈவேரா வெற்றிபெற்றார். இவர் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்... மேலும் பார்க்க

விகடன் கருத்துக்கணிப்பு : `எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை முடக்குகிறதா திமுக?' - முடிவுகள் என்ன?

சென்னையின் பிரபல அண்ணா பல்கலைக் கழகத்தின் மாணவி ஒருவர் கடந்த மாதம் 24-ம் தேதி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விவகாரம், தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 'யார் அந்த சார்?' என்ற கே... மேலும் பார்க்க

இத்தாலி பிரதமர் உடனான மீம்ஸ்... பிரதமர் மோடி சொன்னதென்ன?

ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் தொகுத்து வழங்கிய 'People by WTF' தொடரில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், மற்ற நாடுகளின் உணவுகள் குறித்துப் பேசும்... மேலும் பார்க்க

``ரகசியம் தெரியும் என்றனர்; எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..!" - சாடும் விஜய்

ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக தேர்தல் பிரசாரத்தில் பேசிய நிலையில், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நெருங்கும் நிலையி... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு; யார் இந்த வி.சி.சந்திரகுமார்?

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த மாதம் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 5-ஆம் தேதி இந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் எ... மேலும் பார்க்க