செய்திகள் :

TVK: 'முன்னாள் விசிக நிர்வாகி; இந்நாள் அதிமுக நிர்வாகி..!' - பரபரக்கும் பனையூர்!

post image
தவெகவில் இணைவதற்காக அதிமுகவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் CTR நிர்மல் குமார் பனையூர் அலுவலகத்துக்கு வருகை தந்திருக்கிறார். அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும் பனையூர் அலுவலகத்துக்கு வந்திருக்கிறார்.

கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி விஜய் தவெக கட்சியை தொடங்கினார். இன்னும் இரண்டு நாட்களில் இரண்டாமாண்டு கொண்டாட்டம் நடைபெறவிருக்கிறது. இதுவரைக்குமே மாற்றுக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் யாரையும் தவெகவில் இணைக்காமல் இருந்தார்கள்.

விஜய் - TVK

இன்று பனையூர் அலுவலகத்தில் விஜய் தன்னுடைய மாவட்டச் செயலாளர்களை சந்திப்பதாக திட்டமிட்டிருந்தார். அதற்காக, சென்னை, சேலம், தேனி, திருநெல்வேலி உட்பட19 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்திருந்தனர். விஜய் மதியம் 12:30 மணிக்கு மேல் பனையூர் அலுவலகத்துக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மதியம் 12:10 மணியளவில் விசிகவின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனாவின் குழுவினர் பனையூர் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தனர்.

CTR நிர்மல் குமார்

ஆதவ்வும் இன்னும் சில மணி நேரத்தில் பனையூர் அலுவலகத்துக்கு வரவிருப்பதாகவும் தகவல் வெளியானது. அதனைத்தொடர்ந்து 12:20 மணியளவில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த CTR நிர்மல் குமார் பனையூர் அலுவலகம் வந்து சேர்ந்தார்.

ஆதவ் அர்ஜூனா

த.வெ.க-வின் பொதுச்செயலாளர் ஆனந்த் வரவேற்று அலுவலகத்துக்குள் அழைத்து சென்றார். 12:35 மணியளவில் ஆதவ் அர்ஜூனாவும் பனையூருக்கு வருகை தந்தார். அதேமாதிரி, பெரியார் சர்ச்சையை கிளப்பி வரும் கட்சியின் முக்கிய பெண் நிர்வாகியும் த.வெ.க-வில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.!

இப்படி அடுத்த அடுத்த இணைப்புகளால் உற்சாகமாக காணப்படுகிறது தவெக முகாம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Trump: 'யாராவது இதில் கையெழுத்திடுவார்களா?!' - தன்னை தானே சாடிய ட்ரம்ப்!

அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு அதிக வரியை விதித்து வருகிறார் ட்ரம்ப்.கடந்த திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ட... மேலும் பார்க்க

`தொகுதி மறுசீரமைப்பை நாங்கள் வேண்டாம் எனக் கூறுவது இதனால்தான்..!' - அமைச்சர் ரகுபதி சொல்வதென்ன?

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “கடந்த 1951, 1961, 1971 ஆகிய மூன்று ஆண்டுகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டது. 1951... மேலும் பார்க்க

``நாளையும் என்னால் ஆஜராக முடியாது... உங்களால் என்ன செய்ய முடியும்?" - சீமான் ஆவேசம்

நடிகை விஜயலட்சுமியின் புகாரின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை 12 வார காலங்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிரு... மேலும் பார்க்க

Delimitation : 'அமித் ஷா விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது' - பாஜகவுக்கு எதிராக ராமதாஸ்

`குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான...’நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், "இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் 2026-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செ... மேலும் பார்க்க

புதுச்சேரி IRBn: `32 கி.மீ ரூட் மார்ச்’ - ஐஆர்பிஎன் அதிகாரிகளுக்கு கொடுத்தது தண்டனையா... பயிற்சியா?

புதுச்சேரியில் இந்தியன் ரிசர்வ் பட்டாலியன் (IRBn) படைப்பிரிவு கடந்த 2005-ம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் தலைமையகம் கோரிமேடு ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 24-ம் தேதி டி.ஜி.பி ஷ... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: மாநில அரசின் அச்சமும் மத்திய அரசின் முடிவும்; உங்கள் கருத்து? - #கருத்துக்களம்

தொகுதி மறுசீரமைப்பு, `ஒரே நாடு, ஒரே தேர்தல்' நடைமுறையை கொண்டுவர பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. இதனால், 'மாநில அரசுகளின் உரிமை பறிபோகும்' என, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. `நமக்கான பிரதிநித... மேலும் பார்க்க