'நக்சல்களுக்கு உதவியவர்' - சுதர்ஷன் ரெட்டியை விமர்சனம் செய்த அமித் ஷா; கிளம்பிய ...
TVK: "விஜய், விஜயகாந்த் இடத்தை பூர்த்தி செய்வார்..." - தாடி பாலாஜி பேசியது என்ன?
இன்று மறைந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் பிறந்தநாள். அவருக்கு பல்வேறு தலைவர்கள் அரசியல், சமூக ஆளுமைகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆதரவாளரான தாடி பாலாஜி, விஜயகாந்த் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, "ஒரு சிறந்த தலைவரின் பிறந்தநாள் இன்று. அவர் இறந்தாலும் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் என நான் நினைக்கிறேன்." என்றார்.
விஜயகாந்துக்கு கட்சி, வாரிசுகள் இருக்கும்போது விஜய்யின் தொண்டர்கள் அவரது பெயரை பயன்படுத்தி அரசியல் செய்யலாமா எனப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "செந்தூரப்பாண்டியில் விஜயகாந்த் தான் அவருக்கு (விஜய்) வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தார். விஜய்யின் அப்பாவும் இதைப் பேசியிருக்கிறார். விஜயகாந்தை அவர் அண்ணன் என அழைக்கிறார். விஜயகாந்த் குறித்து விஜய் பேசியதில் எந்த தவறும் இல்லை.

மேலும், விஜய் விஜயகாந்தை முன்னிறுத்தி அரசியல் செய்வதாக எனக்குத் தெரியவில்லை." என்றார்.
விஜயகாந்த் இடத்தை விஜய் நிறப்புவாரா என்ற கேள்விக்கு, "மக்கள் மனது வைத்தால் விஜயகாந்த் இடத்தை விஜய் பூர்த்தி செய்வார்." எனப் பதிலளித்தார்.