Ooty: குளிரைச் சமாளிக்க வீட்டிற்குள் தீ மூட்டிய இளைஞர், புகையால் நேர்ந்த சோகம்; ...
UP: வகுப்பில் ஆபாச வீடியோ பார்த்த ஆசிரியர்... சிரித்த மாணவர்களை ஆத்திரத்தில் தாக்கியதால் கைது
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் ஆபாச வீடியோ பார்த்த ஆசிரியர் குல்தீப் யாதவ், 8 வயது மாணவனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பள்ளி ஆசிரியர் குல்தீப் யாதவ் தனது மொபைல் போனில் ஆபாச வீடியோ பார்த்ததை மாணவர்கள் கவனித்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட மாணவர்கள் சிரித்துள்ளனர். இதனால் அவமானத்தில் ஆத்திரமடைந்த ஆசிரியர் 8 வயது மாணவனை அடித்து உடலில் காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.
அந்தச் சிறுவனின் தந்தை ஜெய் பிரகாஷ், இந்தச் சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் ஆசிரியரை கைது செய்துள்ளனர். மேலும், அந்தச் சிறுவனின் தலைமுடியைப் பிடித்து தலையை சுவரில் அடித்ததும், கைத்தடியால் அடித்ததும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் காதில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ஊரக காவல் கண்காணிப்பாளர் கோபிநாத் சோனி கூறுகையில் , “இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது விசாரணை மேற்கொண்டு சட்டப்படி தண்டனை அளிக்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.
அநாகரிக செயலில் ஈடுப்பட்டது மட்டுமின்றி, 8 வயது சிறுவனை அடித்த ஆசிரியர் குல்தீப் யாதவைப் பலரும் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர்.