செய்திகள் :

US: நடுரோட்டில் `கட்கா' வாளை சுழற்றிய குர்ப்ரீத் சிங்; சுட்டுக்கொன்ற போலீசார் – அதிர்ச்சி வீடியோ

post image

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உயிரிழந்தவர் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த குர்ப்ரீத் சிங். சுமார் 35 வயதான இவர், பஞ்சாபி மரபுக் கலைகளில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

குறிப்பாக, சீக்கிய சமூகத்தின் பாரம்பரிய யுத்தக்கலை கட்காவைக் காட்சிப்படுத்துவதில் பெரும் ஈடுபாடு கொண்டவர்.

Gurpreet Singh

ஜூலை 13, 2025 அன்று, சாலையின் நடுவே தனது வாகனத்தை நிறுத்தி வைத்து, கையில் பாரம்பரிய கூர்மையான வாள் போன்ற கண்டாயுடன் கட்கா கலைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது, காவல்துறையினர் அவரை ஆபத்தான நபராகக் கருதி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்தது, உள்ளூர் மக்களிடையிலும் உலக சிக் சமூகத்திடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினர் அளித்த தகவலின்படி, அந்த நபர் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தியதால், அங்கு இருந்த பொதுமக்களின் பாதுகாப்பு ஆபத்துக்குள்ளாகும் என அவர்கள் கருதினர்.

பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர் கேட்கவில்லை என்பதால், துப்பாக்கிச் சூடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால், காவல்துறையின் நடவடிக்கை அவசியமானதா அல்லது அதிகப்படியானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த சம்பவம் வெளிப்பட்டதும் சீக்கிய சமூகத்தினரிடையே அதிருப்தி கிளம்பியுள்ளது. பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்திய ஒருவரை குற்றவாளியாகக் கருதி துப்பாக்கிச் சூடு நடத்தியது நியாயமற்றது என அவர்கள் வாதிடுகின்றனர்.

Gurpreet Singh
Gurpreet Singh

சிலர் இதை இன அடையாளம் மற்றும் மத அடையாளத்தை தவறாகப் புரிந்துகொண்டதால் நிகழ்ந்த துயரமாகக் கூறுகின்றனர்.

இச்சம்பவம் காவல்துறையின் நடவடிக்கை, கலாச்சார வெளிப்பாடுகள் மற்றும் சமூக பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் விவாதிக்க வைக்கிறது.

அமெரிக்காவில் காவல்துறை துப்பாக்கிச் சூடுகள் அதிகரித்து வரும் சூழலில், இது போன்ற சம்பவங்கள் “மனிதாபிமான அடிப்படையில் வேறு வழிகள் தேட முடியாதா?” என்ற கேள்வியை எழுப்புகின்றன.

``ரூ.232 கோடி மோசடி'' - இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரி ராகுல் விஜய் கைது; CBI நடவடிக்கை

மத்திய புலனாய்வு காவலர்கள் (CBI), ரூ. 232 கோடி மோசடியில் ஈடுபட்டதாக இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) மூத்த மேலாளர் ஒருவரை கைது செய்துள்ளனர்.AAI சார்பில் ராகுல் விஜய் என்ற அதிகாரிக்கு எதிராக புகார் ... மேலும் பார்க்க

Microsoft அலுவலகத்திலேயே மரணமடைந்த இந்திய ஊழியர் – விலகாத மர்மம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலகத்தில், கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி உயிரிழந்த நிலையில் இந்திய ஊழியர் ஒருவர் கண்டெடுக்கப்பட்டார்.பிரதிக்... மேலும் பார்க்க

திருப்புவனம்: `காணாமல் போன நகை' - நிகிதா புகார்; சிபிஐ வழக்கு பதிவு

மடப்புரம் கோயிலில் நகை காணாமல் போனது தொடர்பாக பேராசிரியர் நிகிதா அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இது அஜித்குமார் கொலை வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.அஜித்குமார் கொ... மேலும் பார்க்க

திருத்தணி: கருக்கலைப்பு செய்த 17 வயது மாணவி உயிரிழப்பு - போலி பெண் டாக்டர் சிக்கிய பின்னணி!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் நர்சிங் படித்து வந்தார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவனும் காதலித்து வந்தனர். அந்த சிறுவன், மாணவிக்கு சகோதரர் உறவு முறையாக... மேலும் பார்க்க

ஆம்பூர் கலவர வழக்கு: `22 பேர் குற்றவாளிகள்’ -முன்னாள் எம்.எல்.ஏ சொத்துகளைப் பறிமுதல் செய்ய உத்தரவு!

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி திடீரென மாயமானார். அது குறித்து, பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படைய... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் வெள்ளம்: அடித்துச் செல்லப்பட்ட கார் - தமிழகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பமே பலியான துயரம்!

திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 43). இவரின் மனைவி பவித்ரா (40), மகள்கள் சௌஜைன்யா (8), சௌமையா (6). சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் கடந்த 15 ஆண்டுகளாக கட... மேலும் பார்க்க