செய்திகள் :

Vaishnavi: ``அது உங்கள் பொறாமையை தெளிவாக வெளிப்படுத்துகிறது!'' - வைஷ்ணவி காட்டம்!

post image

'சிறகடிக்க ஆசை' தொடரின் மூலம் சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர் வெற்றி வசந்த்.

அவருக்கும், 'பொன்னி' தொடரில் கதாநாயகியாக நடித்த நடிகை வைஷ்ணவிக்கும், கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

Vetri Vasanth
Vetri Vasanth

தற்போது தன்னைப் பற்றியும், வெற்றி வசந்தைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் எதிர்மறையாக பரப்பப்படும் விஷயங்கள் தொடர்பாக, காட்டமாக பேசி ஒரு காணொளியை பதிவிட்டுள்ளார் வைஷ்ணவி.

அந்தப் பதிவில் அவர் கூறியதாவது:

"எதிர்மறையைப் பரப்பி அவதூறு செய்ய முயல்பவர்களே, தயவு செய்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்களைத் தவிர, உங்கள் வெறுப்பு யாரையும் புண்படுத்தாது.

எதிர்மறைக் கருத்துகளைப் பதிவிட்டு ஒருவரின் பெயரை அவமதிப்பது உங்களை வலிமையானவராக காட்டாது. அது உங்கள் பொறாமையை மட்டுமே வெளிப்படுத்துகிறது. யாரையாவது கீழே இழுத்தால், நீங்கள் உயர்வீர்கள் என்று நினைத்தால், மீண்டும் யோசியுங்கள்.

மரியாதை செயல்களால் பெறப்படுகிறது, திரையில் வெறுப்பைப் பரப்புவதால் அல்ல. பேசுவதற்கு தைரியம் இருந்தால், நேரடியாக மரியாதையுடன் சொல்லுங்கள். இல்லையெனில், உங்கள் எல்லையில் இருங்கள்.

நான் உங்கள் டிராமாவைவிட அமைதியைத் தேர்வு செய்கிறேன். உங்களை நீங்களே கவனியுங்கள், ஏனெனில் உங்களின் நெகட்டிவிட்டி, ஏற்கெனவே வெற்றி பெற்றவரை ஒருபோதும் தடுக்க முடியாது," என்று தெரிவித்துள்ளார்.

``இந்த அளவுக்கு நான் வர்றதுக்கு காரணம் அவர்தான்'' - மறைந்த S.N சக்திவேல் குறித்து M.S பாஸ்கர்

'சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடரின் இயக்குநர் S.N சக்திவேல் மறைவுக்கு, நாதழுதழுக்க நடிகர் M.S பாஸ்கர் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "எஸ்.என் சக்திவேல் சார் வாழ்க்கை... மேலும் பார்க்க

’சின்னப்பாப்பா பெரிய பாப்பா’ இயக்குநர் எஸ்.என்.சக்திவேல் காலமானார்; டி.வி, சினிமா பிரபலங்கள் அஞ்சலி

`வசனங்கள்’ மூலம் சினிமாவில் நுழைந்து நடிகர், இயக்குநர் என உயர்ந்து `சின்னப்பாப்பா பெரிய பாப்பா’, `பட்ஜெட் குடும்பம்’ முதலான தொடர்களை இயக்கிய எஸ்.என்.சக்திவேல் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார்... மேலும் பார்க்க

`துரதிஷ்டவசமாக நான் அவனை நம்பினேன். ஆனால்!' திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்வேதா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர்̀சின்ன மருமகள்'. இந்தத் தொடரில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர் ஸ்வேதா. தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் ஆதி என்பவர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்த... மேலும் பார்க்க

டிவி நடிகர் சங்க தேர்தல்: "'காசு வாங்கிட்டு வேலை செய்ற'னு ஒருமையில் பேசினாங்க" - உமாசங்கர் வேதனை

ஆகஸ்ட் 10ம் தேதி நடந்த சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் தனக்கு நிறையக் கசப்பான அனுபவங்களைத் தந்ததாகவும் தேர்தல் வேலைகளில் ஈடுபட்ட நாள்களில் அமைதி இழந்து தூக்கம் தொலைந்ததாகவும் குமுறியுள்ளார், தேர்தலை ந... மேலும் பார்க்க