செய்திகள் :

Varun Chakaravarthy : ``பதற்றமாக இருந்தேன்; ரோஹித்தான் தேற்றினார்.." - ஆட்டநாயகன் வருண் சக்கரவர்த்தி

post image

ஆட்டநாயகன்!

சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்திய அணி சார்பில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். வெற்றிக்குப் பெரியளவில் உதவிய வருணுக்குதான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

வருண் சக்கரவர்த்தி - கோலி

ஆட்டநாயகன் விருதை வென்றுவிட்டு வருண் சக்கரவர்த்தி பேசுகையில், ``ஆரம்பத்தில் நான் கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். இந்திய அணிக்காக நான் அவ்வளவாக ஓடிஐ ஆடியதில்லை. அதனால்தான் பதற்றம் அடைந்தேன். ரோஹித், ஹர்திக், என அத்தனை பேரும் என்னிடம் பேசித் தேற்றினார்கள்.

நேற்று இரவுதான் நான் ஆடப்போகிறேன் என்பதே தெரியும். இந்திய அணிக்காக ஆட எப்போதுமே ஆவலுடன் காத்திருப்பேன். நான் மட்டுமே தனியாக சிறப்பாக செயல்படவில்லை. அக்சர், குல்தீப், ஜடேஜா என ஒரு அணியாக எல்லோருமே சிறப்பாக ஆடியிருக்கிறோம்." என்றார்.

வருண் சக்கரவர்த்தி

2021 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக இதே துபாயில் வருண் சக்கரவர்த்தி ஆடியிருந்தார். ஆனால், சிறப்பாக ஆடாததால் அணியிலிருந்து டிராப் செய்யப்பட்டார். இப்போது அதே துபாயில் இந்திய அணிக்காக ஒரு பெரிய தொடரில் சிறப்பாக ஆடி ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார். வாழ்த்துகள் வருண்!

IND vs NZ: `பந்துவீச்சாளர்கள் பட்டியல்' - வருண் சக்ரவர்த்தி நிகழ்த்திய புதிய சாதனை

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி 6-வது முறையாகத் தகுதி பெற்றுள்ளது. துபாயில் நேற்று நடந்த குரூப் ஏ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் ... மேலும் பார்க்க

IND vs NZ: `வருண் ஒரு ரெட் டிராகன்' - ஸ்பின்னர்களை வைத்து சண்டை செய்த இந்தியா; சரிந்த நியூசிலாந்து

இந்தியா வெற்றி!சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டி துபாயில் நடந்து முடிந்திருக்கிறது. இந்திய அணியே முதலில் பேட் செய்து சுமாரான ஸ்கோரைத்தான் எடுத்தது. அந்த சுமா... மேலும் பார்க்க

AUS v AFG: குறுக்கிட்ட மழை... அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸி; ஆப்கனுக்கு மிஞ்சியிருக்கும் 1% வாய்ப்பு

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபியில், குரூப் A-ல் இந்தியாவும், நியூசிலாந்தும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், குரூப் B-ல் முதல் அணியாக எந்த அணி அரையிறுதிக்கு முன்னேறப்போகிறது என்ப... மேலும் பார்க்க

Pakistan: ``இலவசமாக பயிற்சியளிக்க தயார்; ஆனால் 58 வயதில் என்னால் அவமானப்பட முடியாது" -வாசிம் அக்ரம்

பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் நடைபெறும், சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு வெற்றிகூட பெறாமல் தொடரிலிருந்து வெளியேறிவிட்டது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் அரங்கேறிய ஐ.சி.சி தொடரில் இப்படியா மோசமாக விள... மேலும் பார்க்க

Dhoni: `தோனியை கேப்டனாக நியமித்தாலும், இந்த அணி..!' - பாக். மகளிர் அணி முன்னாள் கேப்டன்

சொதப்பிய பாகிஸ்தான்பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா என தனித்தனியே அத்தனை பேர் போட்டியை வென்று தரக்கூடியவர்களாகத் தெரிந்தாலும், கடந்த சி... மேலும் பார்க்க

AUSvAFG: அந்த மேக்ஸ்வெல்லை மறக்க முடியுமா? ஆஸியை பழிதீர்க்குமா ஆப்கன்; அரையிறுதி ஸ்பாட் யாருக்கு?

சாம்பியன்ஸ் டிராபிபாகிஸ்தானில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபியில் லீக் சுற்றுகள் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. குரூப் A-ல் எந்தவொரு விறுவிறுப்பான ஆட்டமுமின்றி நியூசிலாந்து, இந்தியா, ஆகிய ... மேலும் பார்க்க