செய்திகள் :

Vedan: "எங்க 35 வருட அரசியலை 2 நிமிடத்துல சொல்லிடுறீங்க" - வேடனுடன் வீடியோ காலில் பேசிய திருமா

post image

விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் ராப் பாடகரான வேடனிடம் வீடியோக்காலில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோக்காலில் பேசிய திருமாவளவன், "நான் கேரளாவிற்கு அடிக்கடி வருவேன்" என்று கூற, "அடுத்தமுறை கேரளாவிற்கு வரும்போது கண்டிப்பாக வீட்டுக்கு வாருங்கள் ஐயா" என்று வேடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தொல்.திருமாவளவன் எம்.பி
தொல்.திருமாவளவன் எம்.பி

"வரும் 14 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மிகப்பெரிய ஒரு பேரணியை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். உங்களால் வர முடியுமா? நீங்கள் வந்தால் தம்பிகள் எல்லோருக்கும் உற்சாகமாக இருக்கும்" என்று திருமாவளவன் கேட்க, "நான் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதன் படப்பிடிப்பைப் பார்த்து விட்டு வர முடியுமா என்று சொல்கிறேன் ஐயா" என்றிருக்கிறார்.

தொடர்ந்து, "உங்கள் பாடல்கள் எல்லாம் புரட்சிகரமாக இருக்கின்றன. நீங்கள் சொல்லுகின்ற கருத்துக்கள் எல்லாம் புரட்சிகரமாக நன்றாக இருக்கின்றன.

மலையாள ராப் பாடகர் வேடன்
மலையாள ராப் பாடகர் வேடன்

நாங்கள் 35 வருடங்களாக அரசியலில் பேசி வரும் விஷயங்களை 2 நிமிட பாடல்களில் சொல்லிவிடுகிறீர்கள். தைரியமாக இருங்கள். நாங்கள் எல்லோரும் இருக்கிறோம். உங்களைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி" என்று வேடனிடம் பேசி இருக்கிறார் திருமாவளவன்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Trump Gold Card: அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறலாம்; நிபந்தனைகள் என்ன?

"ட்ரம்ப் கோல்ட் கார்ட், அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமையைப் பெறுவதற்கான 5 மில்லியன் டாலர் பாதை. இது அமெரிக்க பொருளாதாரத்தில் பங்குவகிக்க விரும்பும் இந்தியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றிகரம... மேலும் பார்க்க

'ஏழு ஆண்டுக்கால மின் தடை பிரச்னைக்குத் தீர்வு!' - திருச்சி எம்.பி துரை வைகோவின் மகிழ்ச்சி பதிவு

ஏழு ஆண்டுகள் மின் பிரச்னையால் தத்தளித்த மக்களின் பிரச்னை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு முடிவுக்கு வர இருப்பதாக, திருச்சி தொகுதி ம.தி.மு.க எம்.பி துரை வைகோ மகிழ்ச்சியோடு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்... மேலும் பார்க்க

Israel: "கிரேட்டா தன்பெர்கின் படகை எதிர்கொள்ள 'தயாராக' இருக்கிறோம்" - இஸ்ரேல் ராணுவ அதிகாரி!

சுவிடனைச் சேர்ந்த 22 வயது காலநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க், காசாவில் மனிதாபிமான உதவிகளை தடுத்துவரும் இஸ்ரேஸ் ராணுவத்தை எதிர்த்து, அங்குள்ள மக்களுக்கு உதவிகள் வழங்குவதற்காகக் கடந்த ஜுன் 1ம் தே... மேலும் பார்க்க

RCB வெற்றிக் கொண்டாட்டம்: "உயிரிழப்புகள் இல்லையென்றால், இது ஒரு சாதனை நிகழ்வு!" - கர்நாடக அமைச்சர்

18 ஆண்டுகள் கழித்து ஐ.பி.எல்லில் ஆர்.சி.பி வெற்றி பெற்றதையடுத்து, நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் கொண்டாட்ட விழா நடத்தப்பட்டது. அங்கே லட்சக்கணக்கில் மக்கள் கூட, கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழ... மேலும் பார்க்க