செய்திகள் :

Vijay: `தைப்பூசத்துக்கு வாழ்த்து; திருப்பரங்குன்றம் பிரச்னையில் சைலன்ட்'- என்ன நினைக்கிறார் விஜய்?

post image
தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோருடன் பரபர மீட்டிங்கை நடத்தி முடித்திருக்கிறார் விஜய். பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா என விஜய் கட்சியின் முக்கியமான நிர்வாகிகளும் இன்று பிரஷாந்த் கிஷோருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த மீட்டிங்குகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க இன்று தைப்பூசத்துக்கு வாழ்த்துகளைச் சொல்லியிருக்கிறார் விஜய். தைப்பூசத்துக்கு வாழ்த்து சொல்லும் விஜய், திருப்பரங்குன்றம் பிரச்னையில் ஏன் எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை? அந்தப் பிரச்னையில் விஜய் எந்தப் பக்கம் நிற்கிறார் எனும் கேள்வி இப்போது வலுவாக எழுந்திருக்கிறது.

'விஜய்யின் தைப்பூச வாழ்த்து!'

'தனித்துயர்ந்த

குன்றுகள் தோறும்

வீற்றிருக்கும்

தமிழ்நிலக் கடவுள்;

உலகெங்கும் வாழும்

தமிழர்களின்

தனிப்பெரும் கடவுள்

முருகப் பெருமானைப்

போற்றுவோம்!

அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!' என தவெக தலைவர் விஜய் X தளத்தில் தைப்பூச வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். விஜய் தைப்பூசத்துக்கு வாழ்த்து சொன்னதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஏனெனில், மாநாட்டிலேயே விஜய் ஒரு விஷயத்தைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். அதாவது, பெரியாரை நாங்கள் கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொள்கிறோம். அதேநேரத்தில் அவரின் கடவுள் மறுப்பு கொள்கையில் எங்களுக்கு உடன்பாடில்லை என விளக்கியிருந்தார்.

'திருப்பரங்குன்ற பிரச்சனையில் அமைதி!'

தொடர்ந்து பல்வேறு மதங்களின் பண்டிகைகளுக்கும் விஜய் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார். பெரியாரை கொள்கைத் தலைவராக முன்மொழிந்திருந்தாலும் கடவுள் நம்பிக்கை தொடர்பாக அவர் விளக்கமளித்திருந்ததால் ஒவ்வொரு பண்டிகைக்கும் விஜய் வாழ்த்து சொல்வது பேசுபொருளாக மாறவில்லை.

ஆனால், இப்போது தைப்பூசத்துக்கு 'தனித்துயர்ந்த

குன்றுகள் தோறும்

வீற்றிருக்கும்

தமிழ்நிலக் கடவுள்...' என ஒரு வாழ்த்தை வெளியிட்டிருக்கிறார். ஆனால், சில நாட்களுக்கு முன்புதான் திருப்பரங்குன்றத்தில் தர்காவில் ஆடு, கோழி வெட்டலாமா என்கிற பிரச்சனை பெரிய பேசுபொருளானது. மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்து முன்னணியினர் திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தை நடத்தியிருந்தனர். இன்னும் அந்தப் பிரச்சனை ஓயவில்லை. தமிழகத்திலுள்ள அத்தனை கட்சிகளும் அந்த விஷயத்தில் கருத்து சொல்லி ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டன. ஆனால், விஜய் அந்தத் திருப்பரங்குன்றம் பிரச்னையில் எந்த கருத்தையும் வெளிப்படுத்தவில்லை. தவெக எந்த நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தவே இல்லை.

விஜய்

கட்சி ஆரம்பிக்கும்போதே பிளவுவாத அரசியலையும் ஊழலையும் எதிர்த்துதான் கட்சி ஆரம்பிக்கிறேன் என விரிவாக அறிக்கை வெளியிட்டிருந்தார். சிறுபான்மையினருக்கும் தலித்துகளுக்கும் ஆதரவாக நிற்பதாகத் தன்னுடைய கொள்கைகளையும் செயல்பாடுகளையும் வடிவமைத்துக் கொண்டார். கட்சிக்கான மாநில நிர்வாகிகளை இப்போதுதான் அறிவித்திருக்கிறார். ஆனால், கட்சி ஆரம்பித்த சமயத்திலே தாஹீரா என்கிற இஸ்லாமிய பெண்ணை கொள்கைப்பரப்புத் துணைச்செயலாளராக அறிவித்திருந்தார். மாநாட்டு மேடையிலும் தன்னுடன் இருக்கை அமைத்து அவரையும் அமர வைத்திருந்தார். அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் வேங்கைவயல் பற்றி பேசியிருந்தார். அப்படியிருக்கையிர் விஜய் திருப்பரங்குன்றம் பிரச்னையில் சைலன்ட்டாக இருந்ததுதான் பல கேள்விகளையும் எழுப்புகிறது.

'விமர்சனங்கள்!'

'அவருக்கு சூட்டிங் இல்லன்னா கூட்டம் நடத்துவாரு. கருத்து சொல்லுவாரு. சூட்டிங் இருந்தா எல்லாத்தையும் மறந்திடுவாரு. அவரோட அரசியல் அவ்வளவுதான். அவருக்கு மக்கள் மீதெல்லாம் அக்கறை இல்லை!' என இணையத்தில் மாற்றுக்கட்சியினர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் பிரச்னை மட்டுமில்லை. பெரியார் சர்ச்சையிலும் விஜய் அமைதியாகத்தான் இருந்தார். கட்சியின் இரண்டாமாண்டு தொடக்கவிழாவில் பெரியார் சிலையைத் திறந்த சமயத்திலும் அந்த சர்ச்சைகள் பற்றி எதையும் பேசவில்லை. வழக்கம்போல, ஒரு அறிக்கை கூட அவரிடமிருந்து வெளிப்படவில்லை. அதேநேரத்தில், நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் தொடர்பாக அமித்ஷா சர்ச்சையை கிளப்பிய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். தேர்ந்தெடுத்து சில விஷயங்களில் கருத்து சொல்வது. சில விஷயங்களில் அமைதியாக இருப்பதை விஜய் வழக்கமாக வைத்திருக்கிறார்.

விஜய்

'தவெக - விளக்கம்!'

திருப்பரங்குன்றம் மாதிரியான பிரச்சனைகளில் விஜய் என்னதான் நினைக்கிறார் என்பதை அறிய, தவெகவின் செய்தித் தொடர்பாளர் வீர விக்னேஷ்வரனைத் தொடர்புகொண்டேன். 'தைப்பூச வாழ்த்தை கூட தலைவர் குறிப்பிட்ட ஒரு சாராருக்கென்று வெளியிடவில்லை. கிறிஸ்துமஸ், ரம்ஜான் என எல்லா பண்டிகையையும் எல்லாருக்குமானதாகத்தான் பார்க்கிறார். அதனால்தான் எல்லாருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். மாநாட்டில் கூட பகவத் கீதை, பைபிள், குரான், அரசியலமைப்புச் சட்டம் என எல்லாருக்கும் பொதுவாக இருக்கும்படியான விஷயங்களைத்தான் நினைவுப்பரிசாக நிர்வாகிகளிடமிருந்து வாங்கியிருந்தார். பிளவுவாதத்தை நாங்கள் எப்போதும் எதிர்ப்போம்.

விஜய்

அயோத்தி முதல் திருப்பரங்குன்றம் வரைக்கும் எல்லா பிரச்னையிலும் மதவாதத்துக்கு எதிராகத்தான் நிற்போம்.' என்றவரிடம் பெரியார் சர்ச்சை குறித்தும் விஜய் எதுவும் பேசவில்லையே. தேர்ந்தெடுத்து சில பிரச்சனைகளுக்கு மட்டுமே கருத்து சொல்கிறாரே என கேள்வியை முன்வைத்தேன். 'எந்த நேரத்தில் எந்த பிரச்னையை பேச வேண்டும் என்பது எங்களின் தலைமைக்குத் தெரியும்.' என்றார்.

அரசியல் என்பது அன்றாட செயல்பாடு. ஒரு விஷயத்தில் கருத்து சொல்லிவிட்டு இன்னொரு விஷயத்தில் கருத்து சொல்லாமல் இருப்பது விஜய்க்குதான் அரசியல்ரீதியாக பிரச்சனையைக் கொடுக்கும் என்கின்றனர் அரசியலை உற்றுநோக்குபவர்கள். விஜய்யின் இந்த நிலைப்பாடு குறித்த உங்களின் கருத்துகளை கமென்ட்டில் பதிவிடவும்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: "கலவர வழக்கில் மாணவியின் தாயாரையே குற்றவாளியாக்குவதா?" - CPI(M) கண்டனம்

கள்ளக்குறிச்சியில் 2022, ஜூலை 13-ம் தேதியன்று, கனியாமூர் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில், மாணவி தற்கொலை செய்துகொண்... மேலும் பார்க்க

வேலூர்: விஐடி அருகில் குண்டும் குழியுமான சாலை... மக்களின் கோபமும் மாநகராட்சியின் விளக்கமும் என்ன?

வேலூர் மாவட்டத்தில் காட்பாடி பகுதியில் விஐடி பல்கலைக்கழகத்தின் மெயின் பிளாக் கட்டடங்கள் அமைந்துள்ளன. இந்த மெயின் பிளாக் கட்டடத்தின் அருகிலேயே இருக்கும் அரசு உள் விளையாட்டு மைதானத்திற்குச் செல்லும் சால... மேலும் பார்க்க

டெல்லி: பெண் அல்லது பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து முதல்வர் - ரேஸில் யார் யார்?

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த 5-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் எனத் தேர்தல் களம் பரபரத்தது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு 70 சட்டமன்றத் தொகுதியில் 48 இடங்க... மேலும் பார்க்க

Sanskrit: `இது பாரதம்... சமஸ்கிருதம்தான் முதன்மை மொழி’ - மக்களவையில் சபாநாயகர் vs தயாநிதி மாறன்

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில், நடைபெற்ற கூட்டத்தில் கேள்வி பதில் நேரத்தின்போது தி.மு.க எம்.பி தயாநிதி மாறனுக்கும், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் மக்களவையில் இன்று காரசார விவாதம் அரங்கே... மேலும் பார்க்க