செய்திகள் :

Vikatan Cartoon : கருத்து சுதந்திரத்திற்காக உடன் நின்றவர்களுக்கு நன்றி!

post image

விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல இடங்களில் நமது வாசகர்களுக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை. குறிப்பிட்ட கார்ட்டூன் குறித்த விளக்கம் கேட்கப்பட்டாலும், இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் விகடனுக்கு வரவில்லை.

முன்னதாக விகடன் இணைய இதழான `விகடன் ப்ளஸ்’ இதழில் (பிப்ரவரி 10) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது. இது பாஜக ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, பாஜக மாநில தலைவரான அண்ணாமலையால் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசிடம் புகாராகவும் அனுப்பபட்டது.

விகடன்

இந்த நிலையில் பல இடங்களில் விகடன் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை என்று வாசகர்கள் தெரிவித்துள்ளனர். நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம்.. ஒரு வேளை குறிப்பிட்ட கார்ட்டூன் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என ஏற்கனவே விகடன் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், இந்த இணையதள முடக்கம் விவகாரத்தில், ஊடக சுதந்திரத்துக்காக, கருத்து சுதந்திரத்துக்காக குரல் கொடுத்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மாவட்ட, மாநில பத்திரிகையாளர் சங்கங்கள், திரை பிரபலங்கள், எல்லாவற்றுக்கும் மேலான விகடன் வாசகர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில், உங்கள் குரல் கருத்து சுதந்திரத்திற்கானது. அதுவே விகடனின் குரலும்.!
முதல்வர் ஸ்டாலின்
வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்
விஜய், தலைவர் த.வெ.க
திருமாவளவன், விசிக
ரவிக்குமார் எம்.பி
சசிகாந்த் செந்தில் எம்.பி
மாணிக்கம் தாக்கூர் எம்.பி
மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக
கனிமொழி எம்.பி,
சு.வெங்கடேசன் எம்.பி,

முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல் திருமாவளவர் எம்.பி, ரவிக்குமார் எம்.பி. காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சசிகாந்த் செந்தில் எம்.பி, மாணிக்கம் தாக்கூர் எம்.பி, த.வெ.க தலைவர் விஜய், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், CPI மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், த.வா.க வேல்முருகன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி, IUML மாநில துணைத் தலைவர் நவாஸ் கனி, எம்.பி. கனிமொழி எம்.பி, த.வெ.கழகத்தின் ஆதவ் அர்ஜுனா, மநீம தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ், திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜோதிமணி எம்.பி, எம்.எம் அப்துல்லா எம்.பி, கேளர காங்கிரஸ், சு.வெங்கடேசன் எம்.பி, பரந்தாமன் எம்.எல்.ஏ., காங்கிரஸின் லக்‌ஷ்மி ராமசந்திரன், பால பாரதி, விஜய் வசந்த் எம்.பி, திருப்பூர் எம்.பி.சுப்பராயன், சி.டி நிர்மல் குமார்...

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், நடிகர் பிரகாஷ் ராஜ், விஷால், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் பா.ரஞ்சித், திருமுருகன் காந்தி, எழுத்தாளர் அருந்ததி ராய், ஊடகவியலாளர்கள், குணசேகரன், கவிதா முரளிதரன், என்.ராம், அனுஷா ரவி (Editor, TheSouthFirst.com), தன்யா ராஜேந்திரன்(The News Minute Editor)...

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கங்கள் முதல் புதுச்சேரி அனைத்து பத்திரிகையாளர் சங்கம்/மன்றங்கள், என பல அமைப்புகள், வாசகர்கள், எங்கள் கவனத்துக்கு வராமல் அல்லது தவறுதலாக பெயர் விடுப்பட்டவர்கள் என விகடனின் கருத்து சுதந்திரத்துக்கான இந்த போராட்டத்தில் தங்களின் ஆதரவை தெரிவித்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.!

`மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலை தொடங்கினால், அமெரிக்காவுக்கு நியாயமாக இருக்காது’ - ட்ரம்ப் ஓப்பன் டாக்

நேற்று முன்தினம் (இந்திய நேரப்படி நேற்று) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் இருவரும் இணைந்து தந்த நேர்காணல் ஒளிபரப்பானது.அந்த நேர்காணலில் பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் பகிர்... மேலும் பார்க்க

Trump : `ஜெலன்ஸ்கி சர்வாதிகாரி..!' - உக்ரைன் அதிபருக்கு எதிராக திரும்பும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது?

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாடு மீது ரஷ்யா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப்போரை நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி : `சாட்சியளிக்க வராமல் புறக்கணித்த விவரங்கள்' - ஆதாரத்தோடு ED வழங்கிய புதிய மனு

செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்திருக்கிறது.அ.தி.மு.க ஆட்சி காலத்தில் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட வேலைகளை ப... மேலும் பார்க்க

டெல்லிக்கு மீண்டும் பெண் முதல்வர்: முதல்முறையாக வெற்றி பெற்ற ரேகா குப்தா நாளை முதல்வராக பதவியேற்பு!

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி தோல்வியை சந்தித்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து சில நாட்கள் ஆன ... மேலும் பார்க்க