செய்திகள் :

Virginia Giuffre: இளவரசர் மீது பாலியல் வன்கொடுமை புகார் - குற்றச்சாட்டு கூறியப் பெண் விபரீத முடிவு

post image

பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்திய வர்ஜீனியா கியூஃப்ரே (Virginia Giuffre) என்ற பெண் தற்கொலை செய்துகொண்டார்.

2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு எதிராக வர்ஜீனியா கியூஃப்ரே பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்ந்தார். தன்னுடைய 17 வயதில் ஜெஃப்ரி எப்ஸ்டீனால் கடத்தப்பட்டு, இளவரசரிடம் அழைத்துச் சென்றதாகவும், அப்போது இளவரசர் என்னை பாலியல் அடிமையாகப் பயன்படுத்திக்கொண்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில், ஆரம்பம் முதலே இந்தக் குற்றச்சாட்டை இளவரசர் ஆண்ட்ரூவ் மறுத்துவந்தார்.

பிரிட்டர் இளவரசருடன் Virginia Giuffre

இதற்கிடையில், வர்ஜீனியா கியூஃப்ரே ஒரு சாலை விபத்தைச் சந்தித்தார். இந்த வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில், வர்ஜீனியா கியூஃப்ரேவும் ஆஸ்திரேலியாவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். இப்போது வர்ஜீனியா கியூஃப்ரேவுக்கு வயது 41. அவருக்கு மூன்று குழந்தைகள் இருப்பது குறிப்பிடதக்கது.

தற்கொலை தடுப்பு மையம்

விஜய் பயணித்த வாகன கதவு சேதம்; தொண்டர்கள் கொந்தளிப்பு - தவெக பூத் கமிட்டி கூட்ட அப்டேட்ஸ்

கோவையில் நடிகர் விஜய் பயணித்த கேரவன் கதவுகளை ரசிகர்கள் முண்டியடித்து நெருங்கும் முயற்சியில் சேதமானதால், தவெக பூத் கமிட்டி மாநாட்டுத் திடலுக்கு செல்ல மாற்று வாகனத்தை பயன்படுத்தியுள்ளனர்.கோவை வந்த விஜய்... மேலும் பார்க்க

Jammu kashmir: `சிந்து நதிநீர் ஒப்பந்தம் ஓர் நியாயமற்ற ஆவணம்’ - ஒமர் அப்துல்லா காட்டம்

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் 26 இந்தியர்கள் கொல்லப்பட்ட கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு, 1960-ம் ஆண்டு போடப்பட்ட இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையிலான சிந்து நதிநீர் ஒப்பத்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அ... மேலும் பார்க்க

சேலம் வெடி விபத்து: 'முறையானப் பாதுகாப்பு கொடுக்கப்படுவதில்லை' - திமுக அரசுக்கு எடப்பாடி கண்டனம்

சேலம் ஓமலூர் அருகே திரௌபதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. கோயில் திருவிழாவுக்காகப் பட்டாசுகள் எடுத்துச் செல்லப்பட்டபோது எதிர்பாராத விதமாக பாட்டாசு வெடித்துச் சிதறியதில் 4 பேர் உயிரிழந்துள்... மேலும் பார்க்க

Bihar : அப்செட்டில் நிதிஷ்; வேகமெடுக்கும் தேஜஸ்வி - பரபர பீகார் தேர்தல்!

பீகார் மாநிலத்தில் 243 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன. இங்கு 13 கோடிக்கு அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். 8 கோடி வாக்காளர்கள் இருப்பதாகத் தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் சொல்கிறது. இங்குதான் இந்த ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜிக்கு பதில் மசோதாவை தாக்கல் செய்த ரகுபதி - ராஜினாமா செய்கிறாரா செந்தில் பாலாஜி?

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. அமைச்சர் செந்தில்பாலாஜி 2023-ம் ஆண்டு ஜூன் 14-ல் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக, ... மேலும் பார்க்க