செய்திகள் :

Vishal: ``எனக்கும், சாய் தன்ஷிகாவிற்குமான நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்தது" - விஷால்!

post image

என்று இன்று தனது 48-வது பிறந்த நாளையொட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனையை முடித்துவிட்டு ஆதரவற்ற, முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி, விருந்து கொடுத்த நடிகர் விஷால், "எப்போது திருமணம் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு இன்று பிற்பகல் இன்று மதியம் நல்லசெய்தியை அறிவிக்கிறேன்." என்றார். 

இந்நிலையில் இன்று நடிகை சாய் தன்ஷிகாவுக்கும், விஷாலுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. இருவீட்டாரின் பெற்றோர்கள் முன்னிலையில் தனிப்பட்ட குடும்ப நிகழ்வாக சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடந்திருக்கிறது.

இதுகுறித்து தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கும் நடிகர் விஷால், "என் பிறந்த நாளுக்கு உலகின் மூலைமுடுக்குகளிலிருந்து எனக்கு வாழ்த்து மழையைக் கொட்டிய அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

எனது இந்தப் பிறந்த நாளில் இன்னொரு மகிழ்ச்சியான நிகழ்வும் நடந்திருக்கிறது. எனக்கும், சாய் தன்ஷிகாவிற்கும் இன்று இருவரின் பெற்றோர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்த புதிய பயணத்தில் எப்போதும் போல உங்கள் ஆசீர்வாதங்களையும் நல்லாசிகளையும் பெற விரும்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

BAD GIRL: 'பெண்கள் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் அல்ல, அது பெண்களின் வேலையுமல்ல' - வர்ஷா பரத்

இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'Bad Girl'. அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்... மேலும் பார்க்க

Vaadivaasal: 'இன்னும் 10 நாள்களில் சொல்லுவேன்'- வாடிவாசல் குறித்து அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'Bad Girl'. அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்பட... மேலும் பார்க்க

Bad Girl: "எத்தனையோ மோசமான படங்களுக்கு கை தட்டி, விசில் அடித்திருப்போம்; அதனால்" - மிஷ்கின்

இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'BAD GIRL'.அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்த... மேலும் பார்க்க

``BAD GIRL-தான் எனது தயாரிப்பின் கடைசி படம்; தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடுகிறோம்'' - வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'BAD GIRL'.அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத... மேலும் பார்க்க

Madharaasi: "எனக்கு சரியான சம்பளம் இல்லாதபோதும் என் மனைவி என்னை ஏற்றுக் கொண்டார்" - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'மதராஸி' திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகிறது. படத்தின் ப்ரோமோஷனுக்காக முக்கிய நகரங்களுக்கு சிவகார்த்திகேயன் சுற்றி வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிர... மேலும் பார்க்க