உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
Waqf: இந்தியாவில் முதல் மாநிலமாக வக்ஃபு சட்டத்தை பயன்படுத்தும் கேரளா; எதிர்க்கும் தமிழ்நாடு!
நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதா 2025-ஐ பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றியிருந்தது.
இந்த விவகாரத்தில், `சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் பாஜக அரசு தலையிடுவதாகவும், அவர்களின் சொத்துகளை அபகரிப்பதற்கான யுக்தி இது' என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பியிருந்தன.
இஸ்லாமிய, சிறுபான்மையின அமைப்புகள் நாடுமுழுவதும் இந்த வக்ஃப் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வந்தன.

இந்தக் கடும் எதிர்ப்புகள் மற்றும் சிறுபான்மையினரின் போராட்டங்களுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து இன்று முதல் சட்டமாக நடைமுறைக்கு வந்திருக்கிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பல முஸ்லீம் அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்த சட்ட மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த கேரளா, நாட்டிலேயே முதல் மாநிலமாக புதிய சட்டத்தின் கீழ் வக்ப் வாரியத்தை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
புதிய சட்டத்தின் கீழ் வக்பு வாரியத்தை ஏற்படுத்த, இன்னும் இரண்டு மாதங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

இங்கு தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க, "வக்ஃப் (திருத்தம்) சட்டம். 2025. 06.04.2025 அன்று அறிவிக்கப்பட்டதிலிருந்து, முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தின் அடிப்படை உரிமைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதையும், இந்தச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது தமிழ்நாட்டில் சுமார் 50 லட்சம் முஸ்லிம்களின் உரிமைகளையும், நாட்டின் பிற பகுதிகளில் உள்ள 20 கோடி முஸ்லிம்களின் உரிமைகளையும் மீறுகிறது மற்றும் பாரபட்சம் காட்டுகிறது என்பதையும் கருத்தில் கொண்டு, 2025 ஏப்ரல் 6 அன்று அமலுக்கு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டம்-2025னை ரத்து செய்ய வேண்டும்" என தி.மு.க. சார்பில் துணைப் பொதுச்செயலாளர் ஏ. இராசா, எம்.பி. அவர்கள் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், எம்.பி. அவர்கள் மூலம் ரிட் மனுதாக்கல் செய்துள்ளார்.
வக்ஃப் திருத்த மசோதா பற்றிய விரிவாகத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையை வாசியுங்கள்
Waqf: வக்ஃப் திருத்த மசோதா என்றால் என்ன? அதன் நோக்கம்? எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?| Explainer
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
