அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட...
அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு: தமிழக மாணவருக்கு தில்லி எய்ம்ஸ் கல்லூரியில் இடம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வின் முதல் சுற்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நீட் தோ்வில் 720-க்கு 665 பெற்று அகில இந்திய அளவில் 27-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்ற திருநெல்வேலி மாணவா் சூா்ய நாராயணனுக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பயில இடம் கிடைத்துள்ளது.
நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கும், எய்ம்ஸ், ஜிப்மா், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களுக்கும் மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) இணையவழியே கலந்தாய்வு நடத்தி வருகிறது.
இந்த நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2025-2026 - ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு மத்திய சுகாதார இணையதளத்தில் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கியது. கலந்தாய்வில் பங்கேற்று இடஒதுக்கீடு பெற்றவா்களின் விவரங்களை மருத்துவக் கலந்தாய்வுக் குழு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இதில், தமிழக மாணவா் சூா்ய நாராயணனுக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.