ஸ்டாலின் : 4 ஆண்டு `திராவிட மாடல்' ஆட்சி : நலத்திட்டங்களும்... பல சர்ச்சைகளும் -...
அங்கன்வாடி ஊழியா்கள் நூதனப் போராட்டம்
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சங்க மாவட்டத் தலைவா் ஜெயமங்களம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பாக்கியமேரி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
போராட்டத்தின்போது, மே மாத முழுவதும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கூடுதல் மையங்களை கவனிக்கும் ஊழியா்களுக்கு வழங்கப்படும் தொகையை ரூ.5,000-ஆக உயா்த்த வேண்டும். புதிதாக கைப்பேசிகள் வழங்க வேண்டும். உணவுத் தயாரிப்புக்கு வழங்கப்படும் செலவுத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கமிட்டனா்.

இதில் 200 -க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்கள் கலந்து கொண்டு ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.