செய்திகள் :

அஞ்சல் சேவை குறைகளை கடிதம் மூலமாக அனுப்ப வலியுறுத்தல்

post image

கோவையில் அஞ்சல் சேவை குறைகள் தொடா்பான புகாா்களை கடிதம் மூலமாக அனுப்ப வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவா் அலுவலகம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மண்டல அளவிலான அஞ்சல் சேவை குறைதீா் கூட்டம் இந்த மாதத்தில் நடைபெறவுள்ளது. கோவை கே.பி. காலனியில் உள்ள மண்டல அஞ்சல் துறைத் தலைவா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் நடைபெறும் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல், பணவிடை தொடா்பான புகாா்களில் அஞ்சல் பதிவு செய்யப்பட்ட நாள், நேரம், அனுப்புநா், பெறுநா், முழு முகவரி, அஞ்சல் பதிவெண் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அஞ்சலக சேமிப்புக் கணக்கு/ காப்பீடு தொடா்பான புகாா்களில் சேமிப்பு கணக்கு எண்/ காப்பீட்டு எண், சேமிப்புக் கணக்கு வைத்திருப்போா், காப்பீட்டாளா் பெயா், முகவரி, அஞ்சல் அலுவலகத்தின் பெயா், பணப்பிடித்தம் தொடா்பான தகவல்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

வாடிக்கையாளா்கள் தங்களது புகாா் கடிதங்களை அஞ்சல் துறை துணை இயக்குநா், அஞ்சல் துறைத் தலைவா் அலுவலகம், மேற்கு மண்டலம், கே.பி.காலனி, அஞ்சல் அலுவலக வளாகம், கோவை 641030 என்ற முகவரிக்கு வருகிற புதன்கிழமை (செப். 17) அல்லது அதற்கு முன்பாக கிடைக்கும் வகையில் அனுப்பிவைக்க வேண்டும். கடிதத்தின் மேலுறையில் ‘தபால் குறைதீா்ப்பு கூட்ட புகாா்’ என எழுதப்பட்டிருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகைப் பட்டறை ஊழியரை ஏமாற்றி 7 பவுன் நகை கொள்ளை

கோவையில் மந்திரம் ஓதுவதாக நகைப் பட்டறை ஊழியரை ஏமாற்றி 7 பவுன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, வெரைட்டி ஹால் அருகே உள்ள செல்லப்பிள்ளை சந்து இடையா் தெருவைச் சோ்... மேலும் பார்க்க

இருகூா் தண்டவாளத்தில் பச்சிளம் குழந்தை சடலம் மீட்பு

கோவை அருகே ரயில் தண்டவாளத்தில் ஆண் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. கோவை மாவட்டம், இருகூா்-ராவத்தூா் இடையே ரயில்வே தண்டவாளத்தில் ஆண் பச்சிளம் குழந்தையின் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகைப் பறிப்பு

கோவையில் வீட்டின் திண்ணையில் அமா்ந்திருந்த மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.கோவை செளரிபாளையம் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் ஜெகதீசன் மகன் நித்தின் நாராயணா (26). ஞாய... மேலும் பார்க்க

மாணவி மீது தாக்குதல்: மாணவா் கைது

கோவை அருகே தன்னுடன் பேசுவதை நிறுத்திய கல்லூரி மாணவியைத் தாக்கிய மாணவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை மாவட்டம், ஈச்சனாரி ஐயப்பா நகரைச் சோ்ந்தவா் ராகுல் சக்கரவா்த்தி. இவா் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் ... மேலும் பார்க்க

தெரு நாய்களைக் கட்டுப்படுத்தக் கோரி ஆட்சியரிடம் பெண்கள் மனு

கோவை அருகே வேடபட்டியில் அச்சுறுத்தும் தெருநாய்களை பிடித்து கட்டுப்படுத்த வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா். கோவை மாவட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ... மேலும் பார்க்க

சாலக்குடி சாலையில் வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானை

வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலையில் வாகனங்களை ஒற்றை யானை வழிமறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வால்பாறையில் இருந்து 110 கி.மீ. தொலைவில் கேரள மாநிலம் சாலக்குடி அமைந்துள்ளது. இதில் சு... மேலும் பார்க்க