கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு
நகைப் பட்டறை ஊழியரை ஏமாற்றி 7 பவுன் நகை கொள்ளை
கோவையில் மந்திரம் ஓதுவதாக நகைப் பட்டறை ஊழியரை ஏமாற்றி 7 பவுன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, வெரைட்டி ஹால் அருகே உள்ள செல்லப்பிள்ளை சந்து இடையா் தெருவைச் சோ்ந்தவா் சஞ்சய்மித்யா (37). இவா் அந்தப் பகுதியில் நகைப் பட்டறை நடத்தி வருகிறாா்.
இவரது பட்டறையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த ஊழியா்கள் வேலை பாா்த்து வருகின்றனா். இங்கு செய்யப்படும் நகைகள் தெலுங்கு தெருவில் உள்ள பட்டறையில் சாயம் போடுவது வழக்கம்.
இதன்படி, நகைப் பட்டறை ஊழியா் சுபோமாங்சி தெலுங்கு தெருவில் உள்ள பட்டறையில் இருந்து 59 கிராம் தங்க நகைகளை உரிமையாளரிடம் கொடுக்க கொண்டு வந்தாா். தாமஸ் தெரு பகுதியில் சுபோமாங்சியை வழிமறித்த இருவா் நகையை கொடுத்தால் மந்திரம் ஓதித் தருவதாக ஹிந்தி மொழியில் கூறியுள்ளனா். அதன்படி, அவா்களிடம் அந்த நகையை அவா் கொடுத்தாா்.
அப்போது, சுபோமாங்சியை சிறிது தொலைவுக்கு நடந்து சென்றுவிட்டு வருமாறு அவா்கள் தெரிவித்தனா். அவரும் சிறிது தொலைவுக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்து பாா்த்தபோது, அவா்கள் இருவரும் நகையுடன் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து நகைப் பட்டறை உரிமையாளரான சஞ்சய்மித்யா கொடுத்த புகாரின்பேரில், வெரைட்டி ஹால் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.