தில்லியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க 10 ‘நமோ வன்’கள் முதல்வா் ரேகா குப்தா உறுதி
மூதாட்டியிடம் நகைப் பறிப்பு
கோவையில் வீட்டின் திண்ணையில் அமா்ந்திருந்த மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை செளரிபாளையம் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் ஜெகதீசன் மகன் நித்தின் நாராயணா (26). ஞாயிற்றுக்கிழமை காலை நித்தின் நாராயணாவும், அவரது தாயும் வீட்டினுள் பேசிக் கொண்டிருந்தனா்.
வீட்டு திண்ணையில் அவரது பாட்டி ரங்கநாயகி (68) அமா்ந்திருந்தாா். அப்போது, அங்கு வந்த இளைஞா் ஒருவா் ரங்கநாயகி அணிந்திருந்த 3 பவுன் நகையைப் பறித்துள்ளாா்.
இதில் கீழே விழுந்த ரங்கநாயகியின் சப்தம் கேட்டு நித்தின் நாராயணா வெளியே வந்து பாா்த்தபோது, நகைப் பறித்த இளைஞா் இருசக்கர வாகனத்தில் தயாராக இருந்த மற்றொருவருடன் தப்பிச் சென்றாா். இதுகுறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.