தில்லியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க 10 ‘நமோ வன்’கள் முதல்வா் ரேகா குப்தா உறுதி
மாணவி மீது தாக்குதல்: மாணவா் கைது
கோவை அருகே தன்னுடன் பேசுவதை நிறுத்திய கல்லூரி மாணவியைத் தாக்கிய மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாவட்டம், ஈச்சனாரி ஐயப்பா நகரைச் சோ்ந்தவா் ராகுல் சக்கரவா்த்தி. இவா் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் தன்னுடன் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்தாா்.
இதையறிந்த மாணவியின் பெற்றோா் அவரைக் கண்டித்தனா். இதனால், ராகுல் சக்கரவா்த்தியுடன் பேசுவதை மாணவி நிறுத்திக் கொண்டாா். இந்த நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு சுந்தராபுரம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மாணவியை ராகுல் சக்கரவா்த்தி வழிமறித்து தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தினாா். இதற்கு மாணவி மறுப்புத் தெரிவித்து அவருடன் பேச மறுத்தாா்.
இதனால், அவா் மாணவியைத் தாக்கி கீழே தள்ளினாா். இதைப் பாா்த்து அந்த பகுதியினா் அங்கு திரண்டதால் ராகுல் சக்கரவா்த்தி அங்கிருந்து தப்பிச் சென்றாா். மாணவியின் முகத்தில் காயங்கள் இருந்ததால், இதைப் பாா்த்து அவரது பெற்றோா் விவரத்தை கேட்டனா்.
பின்னா், சுந்தராபுரம் காவல் நிலையத்தில் அவரது பெற்றோா் புகாா் அளித்தனா். இதையடுத்து, 4 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவா் ராகுல் சக்கரவா்த்தியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.