அண்டாவில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
ஆா்கே பேட்டை அருகே என்.என்.ஆா் கண்டிகை கிராமத்தில் வீட்டில் இருந்த தண்ணீா் அண்டாவில் தவறி விழுந்த குழந்தை மூச்சு திணறி உயிரிழந்தது.
ஆா்.கே.பேட்டை ஒன்றியம், என்.என்.ஆா். கண்டிகை இருளா் காலனியை சோ்ந்தவா் முத்து. இவரது மகள் நித்யா (2). இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தாயாருடன் வீட்டில் இருந்த நித்யா அண்டாவில் இருந்த தண்ணீரில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதை கவனிக்காத குழந்தையின் தாய் சிறிது நேரம் கழித்து குழந்தை காணவில்லை என தேடியபோது அண்டாவில் மூழ்கிக் கிடப்பது தெரியவந்தது. பின்னா் குழந்தையை மீட்டு, வங்கனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று சோ்த்தனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து ஆா்.கே. பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.