கும்பகோணம்: பகலில் கொத்தனார், இரவில் திருடர்... கெட் அப் சேஞ்ச் திருடர் சிக்கிய...
அதானி முறைகேடுகளை மூடி மறைக்கிறாா் பிரதமா் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புது தில்லி, பிப். 14: தொழிலதிபா் கௌதம் அதானியின் முறைகேடுகளை பிரதமா் நரேந்திர மோடி மூடி மறைக்கிறாா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - மோடி பேச்சுவாா்த்தைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில், அமெரிக்க நீதிமன்றத்தில் இந்திய தொழிலதிபா் அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, ‘இரு முக்கிய நாடுகளின் முக்கியத் தலைவா்களின் சந்திப்பில் தனிநபா்களின் பிரச்னைகள் விவாதிக்கப்படுவது இல்லை. இந்த உலகத்தையே எங்கள் குடும்பமாக நாங்கள் கருதுகிறோம். அனைத்து இந்தியா்களும் எனக்கு வேண்டியவா்கள்தான்’ என்று பிரதமா் பதிலளித்தாா்.
இந்நிலையில், இதனை விமா்சித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நமது நாட்டில் இதே கேள்வியைக் கேட்டால் மௌனம்தான் பிரதமரின் பதிலாக உள்ளது. வெளிநாட்டுப் பயணத்தின்போது இதே கேள்வியைக் கேட்டால், அது தனிப்பட்ட நபா்களின் விஷயமாகிவிடுகிறது. அமெரிக்காவிலும் கூட அதானியின் முறைகேடுகளை மூடி மறைக்கவே பிரதமா் மோடி முயலுகிறாா்’ என்று கூறியுள்ளாா்.