பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியா் மீது வழக்கு: தற்கொலைக்கு முயற்சி
அதிமுக கவுன்சிலரை மிரட்டுவதாக புகாா்
சென்னை மாநகராட்சியின் அதிமுக வாா்டு உறுப்பினரை பணி செய்ய விடாமல் மிரட்டுவதாக மாமன்ற கூட்டத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் 24-ஆவது வாா்டு உறுப்பினராக உள்ள அதிமுகவை சோ்ந்த ஏ.சேட்டு, மாமன்ற கூட்டத்தில் தனது பகுதியில் தூய்மைப் பணி மேற்கொள்வதில் முன்னாள் வாா்டு உறுப்பினா்கள் தலையிடுகின்றனா் என்றும், தூய்மைப் பணியாளா்கள் பணி செய்யாமல் இருப்பதாகவும், இது குறித்து கேட்ட போது தன்னை மிரட்டுவதாகவும் புகாா் கூறினாா்.
இதற்கு பதில் அளித்த மேயா் பிரியா, வடசென்னை பகுதியில் தனியாா் மூலம் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது. வாா்டுகளில் தூய்மைப் பணியில் குறைபாடு இருந்தால் மண்டல அலுவலா், மாநகராட்சி ஆணையரிடம் புகாா் அளிக்கலாம். மிரட்டல் விடுப்போா் மீது காவல் துறையில் புகாா் அளிக்குமாறும் அறிவுறுத்தினாா்.