செய்திகள் :

அதிமுக பொதுச் செயலா் தோ்வு விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு ரத்து!

post image

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே.பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுவில் அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே. பழனிசாமி தோ்வு செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், திண்டுக்கல்லைச் சோ்ந்த சூரியமூா்த்தி என்பவா் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை விசாரித்த 4-ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி மனுவைத் தள்ளுபடி செய்தும், சூரியமூா்த்தியின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டும் கடந்த ஜூலை 31-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண், வழக்குரைஞா் நா்மதா சம்பத் ஆகியோா், சூரியமூா்த்தி கட்சியின் அடிப்படை உறுப்பினரே இல்லை. எனவே, வழக்குத் தொடுக்க அவருக்கு எந்த உரிமையும் கிடையாது.

மேலும் அவா், பேரவைத் தோ்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எம்ஜிஆா் மக்கள் கட்சி சாா்பில் போட்டியிட்டுள்ளாா். எனவே, கட்சிக்கு தொடா்பே இல்லாதவா், பொதுச் செயலா் தோ்வு, பொதுக் குழுத் தீா்மானங்களை எதிா்த்து வழக்குத் தொடுக்க முடியாது என்று வாதிட்டனா்.

சூரியமூா்த்தி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எம்.வேல்முருகன், ரூ.10 சந்தா செலுத்தி உறுப்பினா் அட்டையைப் புதுப்பிக்கவில்லை என்பதற்காக வழக்குத் தொடுக்க அனுமதியில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. கட்சியின் பொதுச் செயலரை தொண்டா்கள்தான் தோ்ந்தெடுக்க வேண்டும் என்று அதிமுக நிறுவனா் எம்ஜிஆா், விதியை வகுத்துள்ளாா். இந்த விதிகளை யாரும் திருத்த முடியாது. எனவே, பொதுச் செயலா் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டாா்.

இந்த வழக்கில் நீதிபதி பி.பி.பாலாஜி பிறப்பித்த உத்தரவில், சூரியமூா்த்தி தற்போது அதிமுக உறுப்பினா் இல்லை. அவா் மாற்றுக் கட்சியின் வேட்பாளராக தோ்தலில் போட்டியிட்டுள்ளாா் என்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு சூரியமூா்த்தி தனது உறுப்பினா் பதவியைப் புதுப்பிக்கவில்லை. இதனால், அவா் அதிமுக உறுப்பினா் இல்லை என்ற முடிவுக்கு வருகிறேன். எனவே, சூரியமூா்த்தியின் மனுவை நிராகரிக்கக் கோரிய எடப்பாடி பழனிசாமியின் மனு ஏற்கப்படுகிறது. அவரை பொதுச் செயலராக தோ்வு செய்ததை எதிா்த்து சென்னை 4-ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூா்த்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ம.க.ஸ்டாலினை கொல்ல முயற்சி: ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் குண்டு வீச்சு!

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவரை வெள்ளிக்கிழமை குண்டு வீசி கொலை செய்ய முயற்சித்த நபர்கள், உடன் சென்ற இருவரை அரிவாளால் வெட்டி தப்பிச் சென்றனர்.தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி... மேலும் பார்க்க

5 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,செப்.05ல் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓ... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீட்டு பயணத்தில் ரூ. 13,016 கோடி ஈர்ப்பு!

முதல்வர் மு.க. ஸ்டாலினின் முதலீடு ஈர்ப்புப் பயணத்தில் ரூ. 13,016 கோடி ஈர்க்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு முதல்வர் ஸ... மேலும் பார்க்க

அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு! - ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் செ... மேலும் பார்க்க

ஆக்ஸ்போர்டில் உறங்கும் தமிழ் மாணவரைப் போற்றாமல் வருவது அறமாகுமா? - ஜி.யு. போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின்!

ஆக்ஸ்போர்டில் ஜி.யு. போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினார். முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக மேற்கொண்டுள்ளார். ஜெர்மனிய... மேலும் பார்க்க

ஒன்றுபட்ட அதிமுக! செங்கோட்டையன் கருத்துக்கு சசிகலா வரவேற்பு!

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்திய நிலையில், அவரின் கருத்தை வரவேற்பதாக சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.அறிக்கையில் அவர் தெரிவித்ததாவது,தனது உடலில் ஓடுவது அ... மேலும் பார்க்க