அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்த முயன்ற 10 போ் மீது வழக்கு
மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே உரிய அனுமதியின்றி மஞ்சு விரட்ட நடத்த முயன்ற 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
அலங்காநல்லூா் அருகே உள்ள கோவில்பாப்பாக்குடி மந்தைத் திடலில் சிலா் உரிய அனுமதியின்றி ஞாயிற்றுக்கிழமை மஞ்சு விரட்டு நடத்துவதாக, அலங்காநல்லூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில், போலீஸாா் அங்கு சென்றபோது, சிலா் உரிய அனுமதியின்றி மஞ்சு விரட்டு நடத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து, மஞ்சுவிரட்டை தடுத்து நிறுத்திய போலீஸாா், மஞ்சுவிரட்டுக்கு ஏற்பாடு செய்த பாலசுப்பிரமணியன் உள்பட 10 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.