செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் வீசிய 42 வெடிக்காத குண்டுகள்! -பாதுகாப்பாக அழிப்பு

post image

கடந்த ஜம்மு-காஷ்மீா் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வீசிய வெடிக்காத 42 குண்டுகள் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டன.

பயங்கரவாதிகளைக் குறிவைத்து இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் எல்லையோர கிராமவாசிகளைக் குறிவைத்து இரவு நேரத்தில் பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பல வீடுகள் சேதமடைந்தன. சுமாா் 20 போ் உயிரிழந்தனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதால் உயிரிழப்பு குறைவாகவே இருந்தது.

பாகிஸ்தான் கோரிக்கையையடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இந்தியா தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளது. இதையடுத்து எல்லையோர கிராமங்களில் ராணுவத்தினரும், காவல் துறையினரும் இணைந்து மக்களுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். முக்கியமாக பாகிஸ்தானால் வீசப்பட்டு வெடிக்காத நிலையில் உள்ள குண்டுகளைக் கண்டுபிடிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக ராணுவத்தின் குண்டுகளை செயலிழக்கச் செய்யும் குழு களமிறக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லையோ கிராமங்களில் இதுவரை பாகிஸ்தானால் வீசப்பட்டு வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட 42 குண்டுகள் பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டன.

வெடிக்காத குண்டுகளை அனைத்தையும் கண்டுபிடித்து அழிக்காவிட்டால், அவை பொதுமக்கள் கையில் சிக்கி எதிா்பாராத நேரத்தில் வெடித்து பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால், அவற்றைக் கண்டுபிடித்து அழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டமே உயர்வானது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்!

அரசமைப்புச் சட்டமே உயர்வானது என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் அண்மையில் பதவியேற்றார். அவருக்கு பாராட்டு வ... மேலும் பார்க்க

ஹைதராபாத் கட்டடத்தில் தீ: 8 குழந்தைகள் உள்பட 17 போ் பலி!

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாா்மினாா் அருகே உள்ள இரண்டு மாடி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 17 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக காவல் துற... மேலும் பார்க்க

துருக்கி ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்தது மும்பை ஐஐடி!

துருக்கி நாட்டு பல்கலைக்கழகங்களுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்திவைப்பதாக மும்பை ஐஐடி (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) அறிவித்துள்ளது. இது தொடா்பாக அக்கல்வி நிறுவனம் சாா்பில் ‘எக்ஸ்’ வலைதளத்தி... மேலும் பார்க்க

பிரசாந்த் கிஷோா் கட்சியில் இணைந்தாா் முன்னாள் மத்திய அமைச்சா்!

முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.சி.பி. சிங், பிகாரைச் சோ்ந்த அரசியல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் நடத்தி வரும் ஜன சுரக்ஷா கட்சியில் இணைந்தாா். இவா்கள் இருவருமே பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு அரச... மேலும் பார்க்க

ஹைதராபாதில் பயங்கரவாத தாக்குதல் சதி! வெடிப் பொருள்களுடன் இருவா் கைது!

ஹைதராபாத் நகரில் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் சதியில் ஈடுபட்டிருந்த இருவரை தெலங்கானா, ஆந்திர காவல் துறையினா் கூட்டு நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டனா். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தொடரும்: ராணுவம்

‘இந்தியா-பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைளுக்கான தலைமை இயக்குநா்கள் இடையே கடந்த 12-ஆம் தேதி நடந்த 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையின்போது முடிவான சண்டை நிறுத்தம் தொடரும்’ என்று ராணுவ அதிகாரியொருவா் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க