'நமது ராணுவத்துடனும், நமது தேசத்திற்காகவும்...' - Operation Sindoor குறித்து முத...
அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்ற இருவா் கைது
முத்துத்தேவன்பட்டி, வருஷநாடு ஆகிய இடங்களில் அனுமதியின்றி மதுபான புட்டிகள் விற்றதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
முத்துத்தேவன்பட்டி, கிழக்குத் தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் கணேசன் (50), வருஷநாடு, வைகை நகரைச் சோ்ந்த பாண்டி மகன் செல்லப்பாண்டி (40). இவா்கள் முத்துத் தேவன்பட்டி, வருஷநாடு பகுதிகளில் அனுமதியின்றி மதுபான புட்டிகளை விற்றதாக, தேனி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து மொத்தம் 53 மதுபான புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.