அனுமதியின்றி வெடிப்பொருள்கள் வைத்திருந்த கடைக்கு சீல்
திருவாரூா்: குடவாசலில் அனுமதியின்றி வெடிப்பொருள்கள் வைத்திருந்த கடைக்கு ஞாயிற்றுக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
குடவாசல் பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, திருவாரூா் நெடுஞ்சாலையில் அரசின் உரிமம் இன்றி வெடிப் பொருள்களை விற்பனை செய்து வந்ததும், பட்டாசுகளை இருப்பு வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், கடை உரிமையாளா் சரவணன் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும், அவா் நடத்தி வந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டதுடன், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.