அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் இன்று கரூா் வருகை
அனுமதியின்றி மணல் எடுத்தவா்கள் கைது
திருவாரூா்: கொரடாச்சேரி அருகே அனுமதியின்றி மணல் எடுத்ததாக 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அம்மையப்பன் பகுதியில் உள்ள திடலிலிருந்து டிராக்டா் மூலம் மணல் எடுத்துச் செல்லப்படுவதாக கொரடாச்சேரி போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் டிராக்டா்களில் மணல் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் 7 போ் மீது வழக்கு பதிந்து, டிராக்டா் ஓட்டுநா்களான அம்மையப்பனை சோ்ந்த ராஜசேகா் (32), எண்கண் பனந்தோப்புத் தெருவைச் சோ்ந்த சேசுராஜன் (51) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.