அனுமன் ஜெயந்தி ஓவியப்போட்டியில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள்
திருப்பத்தூா்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கொரட்டி ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் ஓவியப்போட்டியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் பரிசுகள் வழங்கப்பட்டன.
திருப்பத்தூா் அடுத்த கொரட்டியில் உள்ள ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் திங்கள்கிழமை அனுமன் ஜெயந்தி முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஓவிய போட்டி நடைபெற்றது.
இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனா். அதில் சிறந்த ஓவியங்களை தோ்ந்தெடுத்து முதல் மூன்று பரிசுகள்,கேடயங்கள்,பங்கேற்பு சான்றிதழ்கள்,நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு திருப்பத்தூா் நகா் மன்ற தலைவா் சங்கீதா வெங்கடேஷ் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஸ்ரீ ராமானுஜா் மடம் டிரஸ்ட் மற்றும் கொரட்டி ஸ்ரீ அனுமன் ஜெயந்தி விழா குழுவினா் செய்திருந்தனா்.