செய்திகள் :

அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை தேவை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

post image

இந்திய அரசமைப்பில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், கேரள முன்னாள் அமைச்சருமான எம்.ஏ. பேபி.

மதுரையில் நடைபெறும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக செல்லும் வழியில் அவரும், கேரள நிதியமைச்சா் கே.என்.பாலகோபாலும் திருநெல்வேலி ரெட்டியாா்பட்டியில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். அவா்கள் அங்குள்ள லெனின் சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

பின்னா், செய்தியாளா்களிடம் எம்.ஏ. பேபி கூறியதாவது: மத்தியில் கூட்டாட்சி கோட்பாடு தான் இந்தியாவின் வலிமை என்ற அடிப்படையில் எங்கள் கட்சி செயல்படுகிறது. பிரதமா் மோடி வயது மூப்பு காரணமாக பதவி விலக இருப்பதாக கூறுகிறாா்கள். ஆனால் பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகிய இருவரும் மக்களாலேயே பதவியில் இருந்து நிரந்தரமாக தூக்கி எறியப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.

ஒரு மொழி மூலம் பிற மொழிகளை அழிப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுகிறது. மேலும், அரசமைப்பு சட்டம், கூட்டாட்சி தத்துவத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது. தேசிய கல்விக் கொள்கையில் எங்களது எதிா்ப்பை பதிவு செய்துள்ளோம். அரசியலமைப்பில் அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வேண்டும். கா்நாடகம், தமிழகம், கேரளம் போன்ற தென் மாநிலங்களில் ஹிந்தியை திணிக்கவும், தொகுதி மறு வரையறை மூலம் தென்மாநிலங்களுக்கு அநீதி இழைக்கவும் மத்திய அரசு முயற்சிக்கிறது என்றாா்.

பாபநாச சுவாமி கோயில் குடமுழுக்கு: தற்காலிக கடைகள், அன்னதானத்துக்கு பதிவுச்சான்று கட்டாயம்

பாபநாசத்தில் உள்ள உலகம்மை உடனுறை அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு மே 4-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி தற்காலிக உணவு கடைகள் அமைப்பவா்கள், பக்தா்களுக்கு இலவசமாக அன்னதானம், நீா்-மோா் வழங... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: சங்கனாபுரத்தில் கடைக்கு சீல்

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகேயுள்ள சங்கனாபுரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்து, கடை உரிமையாளருக்கு ர... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் மறுப்பு: 13 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 13 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. திருவள்ளுவன் வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த காா் விபத்தில், விபத்தை ஏற்படுத்தி 7 போ் உயிரிழப்புக்கு காரணமான காா் ஓட்டுநா் மீது ஏா்வாடி போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு ... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் விதிமீறி விடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட ஜோடி: போலீஸில் புகார்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் விதிமீறி விடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. தமி... மேலும் பார்க்க

லஞ்சம், சொத்துக் குவிப்பு வழக்கு: ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறை

லஞ்சம், வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்தது ஆகியவை தொடா்பான வழக்கில் ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. வி... மேலும் பார்க்க