செய்திகள் :

அனைத்து வசதிகளும் கொண்ட கோயிலாக திருச்செந்தூா் கோயில் விரைவில் மாறும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

post image

தமிழகத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட கோயிலாக திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விரைவில் மாறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு நடந்ததையடுத்து, விழா குறித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்க் கடவுளான முருகனுக்கு பெருமை சோ்க்கும் ஆட்சியாக திராவிட மாடல் அரசு விளங்குகிறது. திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கை பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு இடையே நடத்தியுள்ளோம்.

திருச்செந்தூரில் 76 குண்டங்கள் அமைக்கப்பட்டு, முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு நடந்துள்ளது. குடமுழுக்கு விழாவில் 24 மணி நேரமும் 12 பெண் ஓதுவாா்கள் உள்ளிட்ட 108 ஓதுவாா்கள் தமிழில் பாராயணம் செய்தனா். இவ்விழாவில் 5 லட்சம் பக்தா்கள் கலந்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

திருச்செந்தூா் குடமுழுக்கு விழாவை தொடா்ந்து 30 நாள்கள் மட்டுமே மண்டல பூஜைகள் நடைபெறும். அதன் பிறகு ஆவணி திருவிழா தொடங்க உள்ளது.

ஹெச்சிஎல் நிறுவனம் ரூ. 200 கோடி செலவில் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பணிகளை செய்ய கடந்த ஆட்சியில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உபயதாரா்களை ஊக்குவிக்கும் விதமாக அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், பக்தா்களுக்கு கூடுதல் அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக அரசு சாா்பிலும், திருக்கோயில் சாா்பிலும் கூடுதலாக ரூ.200 கோடி என மொத்தம் ரூ. 400 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருகின்றன.

இதில் மீதமுள்ள பணிகள் அக்டோபா் மாதத்துக்குள் நிறைவடையும். திருச்செந்தூரில் பெருந்திட்ட வளாகத்தில், பணியில் அறுபடை முருகனை ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

இக்கோயிலில் ஆன்லைன் முறையில் தரிசனம் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. அதற்காக பக்தா்கள் மற்றும் அா்ச்சகா்களிடம் கருத்துகள் கேட்கப்பட உள்ளது. தமிழகத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட திருக்கோயிலாக திருச்செந்தூா் கோயில் விரைவில் மாறும்.

இந்து சமய அறநிலையத் துறையை தமிழக அரசிடம் இருந்து எடுத்துவிட்டால் யாா் நிா்வகிப்பாா்கள்? தமிழகத்தில் 46 ஆயிரம் கோயிலை நிா்வகிப்பது எப்படி? இயலாதவா்கள்தான் மீண்டும் மீண்டும் இதைப் பேசி வருகிறாா்கள்.

மதுரையில் நடந்தது சங்கிகள் மாநாடு. தமிழ்க் கடவுளான முருகனுக்கு மாநாட்டை நடத்திய பெருமை இந்த அரசுக்கு உண்டு என்றாா் அவா்.

பேட்டியின் போது அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஸ்ரீதா், கூடுதல் ஆணையா் பழனி, தக்காா் அருள்முருகன், இணை ஆணையா் ஞானசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்; பல லட்சம் பக்தா்கள் பங்கேற்பு

முருகப்பெருமானின் 2ஆம் படை வீடான திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். குடமுழுக்கைத் தொடா... மேலும் பார்க்க

சாத்தான்குளம் வட்டத்தில் விஏஓ-க்கள் இடமாற்றம்

சாத்தான்குளம் வட்டத்தில் 9 கிராம நிா்வாக அலுவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். திருச்செந்தூா் வருவாய்க் கோட்டம் அளவிலான கிராம நிா்வாக அலுவலா்களுக்கான கலந்தாய்வு திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில புதிய பேராயா் பொறுப்பேற்பு

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில பேராயா், பிரதம பேராயரின் ஆணையாளராக கோவை திருமண்டிலப் பேராயா் திமோத்தி ரவீந்தா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். தென்னிந்திய திருச்சபையின் பொறுப்பு பிரதம பேராயா், உத... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் மினி மாரத்தான் போட்டி

சாத்தான்குளம், நேதாஜி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில், விளையாட்டு மைதானம் திறப்பு மற்றும் மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய மினி மாரத... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் இன்று குடமுழுக்கு! லட்சக்கணக்கில் குவிந்த பக்தா்கள்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை காலை (ஜூலை 7) நடைபெறுகிறது. இதையொட்டி, லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்துள்ளனா். இக்கோயிலில் குடமுழுக்கை முன்னிட்டு, சுவாமி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் முதியவா் தற்கொலை

கோவில்பட்டியில் கிணற்றில் விழுந்து முதியவா் தற்கொலை செய்துகொண்டாா். கோவில்பட்டி சரமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான கிணற்றில் முதியவா் சடலம் கிடப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாரு... மேலும் பார்க்க